காதல் என்பது பொதுவுடமை,Kadhal enbathu podhuvudamai
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : ஜியோ பேபி, மேன் கைன்டு சினிமாஸ், சைமென்ட்ரீ சினிமாஸ் மற்றும் நித்ஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் : ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்
நடிகர்கள் : லிஜோ மோல், வினித், ரோகிணி, தீபா, கலேஷ், அனுஷா
வெளியான தேதி : 14.02.2025
நேரம் : 2 மணி நேரம்
ரேட்டிங் : 2.75/5

கதை சுருக்கம்
ரோகிணி - வினித் தம்பதியின் மகளான லிஜோமோல், தன்னை விரும்பிய கலேஷ்-ஜ தவிர்த்து விட்டு அனுஷா என்ற பெண்ணை காதலிக்கிறார். லெஸ்பியன் உறவில் விருப்பம் கொண்ட லிஜோமோல் தங்களின் காதலை அம்மா ரோகினிடம் சொல்கிறார். முற்போக்கு சிந்தனை கொண்ட ரோகினி அதை ஏற்றுக் கொண்டாரா, அப்பா வினித் என்ன செய்தார், சமூகத்தின் பார்வை என்ன? என்பதே இந்த படத்தின் மீதி கதை.

படம் எப்படி
இரண்டு பெண்களுக்கு இடையிலான வளர்ந்து வரும் காதல் கதை குறித்து பேசுகிறது. அதோடு அவர்கள் குடும்பத்தினரிடம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஆராய்கிறது. லெஸ்பியன் காதலுக்கும் சமூகத்திற்கும் இடையிலான சிக்கல்களை விரிவாக எடுத்துரைக்கின்றது இந்த காதல் என்பது பொதுவுடமை படம்.

லென்ஸ், தலைகூத்தல் போன்ற சிறந்த படங்களை இயக்கிய ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் தனது மூன்றாவது படைப்பாக இந்த படத்தை (பாடத்தை) ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். ஓரினச்சேர்க்கை காதலுக்கு சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக, அதேநேரம் சற்றும் ஆபாசம் இல்லாமல் சொல்லி உள்ளார் இயக்குனர்.

படத்தின் மையக்கருவை தாங்கி நடித்துள்ள மலையாள நடிகை லிஜோமோல் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்தை தாங்கி பிடிக்கிறார். அவருக்கு இணையாக நடித்துள்ள அனுஷாவும் போல்டான நடிப்பை கொடுத்துள்ளார். அதேபோல் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரோகிணி, இதுபோல் புதுவித காதல் அனுபவத்தை பார்க்கும் அல்லது கேட்கும் தாய்மார்களின் முகமாக தெரிகிறார். எமோஷன் கலந்த தனது அனுபவ நடிப்பை அசால்டாக வெளிப்படுத்துகிறார். அதேபோல் வினித் இந்த சமூகத்தில் இருக்கும் தந்தையர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறார். தான் காதலித்த பெண் லெஸ்பியன் உறவில் விருப்பம் கொன்டவர் என தெரிந்தும் அவர்களின் உறவுக்கு உதவும் ஜென்டில் மேன் ஆக கலேஷ் நடித்துள்ளார். ரோகிணி வீட்டு வேலைக்காரியாக நடித்துள்ள தீபாவின் கேரக்டர் அடித்தட்டு மக்களின் மன ஓட்டத்தை அப்படியே காட்டுகிறது.

இது போன்ற படங்களுக்கு பெரிய பலமாக இருப்பது இசைதான். அந்தப் பணியை ஆகச் சிறப்பாக செய்துள்ளார் இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன். நடிகர்களை நேர்த்தியாக கேமராவில் படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீ சரவணன்.

பிளஸ் - மைனஸ்
உலகத்தில் அங்கொன்றும், இங்கொன்றும் இருக்கும் ஓரினச்சேர்க்கை உறவை சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும் என்ற இயக்குனரின் எண்ணம் படத்திற்கு பிளஸ் என்றாலும், முற்போக்கு சிந்தனை கொண்ட அந்தப் பெண்ணின் தாயே அதை ஏற்றுக்கொள்ள தயங்குவது மைனஸ்.

காதல் என்பது பொதுவுடமை - சமூகப் பார்வை

 

பட குழுவினர்

காதல் என்பது பொதுவுடமை

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓