2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - நேமிசந்த் ஜபக்
இயக்கம் - முகில் செல்லப்பன்
இசை - இமான்
நடிப்பு - பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ்
வெளியான தேதி - 19 நவம்பர் 2021 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 10 நிமிடம்
ரேட்டிங் - 2/5

கடமை தவறாத காவல் துறை அதிகாரிகளின் பல கதைகளை தமிழ் சினிமாவில் பார்த்துவிட்டோம். இருந்தாலும் இன்னும் பல கதைகள் தமிழ் சினிமா இயக்குனர்கள் வசம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

90களில் வர வேண்டிய ஒரு கதையை 2021ல் படமாகத் தயாரித்து வெளியிட தனி தைரியம் வேண்டும். படத்தின் ஆரம்பத்திலேயே இது என்ன மாதிரியான படமாக இருக்கப் போகிறது என்பதை புரிய வைத்துவிட்டார்கள்.

ஒரு நீதிபதி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. காவல் துறை கூட்டம் நடக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க பொன் மாணிக்கவேல் தான் பொருத்தமான அதிகாரி என ஒரு மேலதிகாரி சொல்கிறார். உடனே அவரைக் கூப்பிடுங்கள் என்கிறார்கள். ஆனால், அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். அவரும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதற்கு மேலும் என்ன நடக்கும் என்பதை கார்ட்டூன் சேனல் பார்க்கும் சிறு குழந்தையைக் கேட்டால் கூட சொல்லிவிடும்.

அதே கார்ப்பரேட் வில்லன், அவருக்கு உதவி செய்யும் இன்ஸ்பெக்டர், நீதிபதி, அந்த வில்லனுக்கு மேல் இன்னொரு வில்லன். அவர் விரும்பிப் பார்க்கும் பெண்களை கடத்திக் கொண்டு போய் கட்டி வைத்து கற்பழிப்பார். தமிழ் சினிமா மாறி பல வருடங்களாகிவிட்டது என்பது ஹிந்திப் பக்கம் போன பிரபுதேவாவுக்குத் தெரியாமல் போய் இருப்பது ஆச்சரியம்தான்.

கதாநாயகன், கை நிறைய சம்பளம் போதும் என கூப்பிட்டதும் பிரபு தேவா நடிக்க வந்திருப்பார் போலிருக்கிறது. கறாரான காவல் துறை அதிகாரி சார் நீங்க என இயக்குனர் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. எப்போதும் விறைப்பாக இருப்பது போல நடந்து கொண்டிருக்கிறார்.

பிரபுதேவாவுக்கு ஒரு ஜோடி இருக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகி நிவேதா பெத்துராஜ். கணவருடன் சமையலறையில் ரொமான்ஸ் செய்யும் அதே 90களின் கதாநாயகி.

சுரேஷ் மேனன் முதல் கார்ப்பரேட் வில்லன். அவருக்கு மேல் மற்றொரு கார்ப்பரேட் வில்லன் சுதன்சு பாண்டே. இவர் கையசைத்தாலே உள்துறை அமைச்சரே ஓடோடி வந்து பயந்து பேசுகிறாராம்.

ஒரு டூயட், ஒரு சென்டிமென்ட் பாடல். இமானும் கண்ணே, தங்கமே, செல்லத் தங்கமே என பாடல்களையும், பின்னணி இசை என 70களில் வந்த படங்களில் வாசிப்பதைப் போல வாசித்துத் தள்ளியிருக்கிறார்.

90களுக்குப் பின் வெளிவந்த பல நல்ல சினிமாக்களை இயக்குனர் முகில் செல்லப்பன் பார்த்திருக்க மாட்டார் போலிருக்கிறது.

பொன் மாணிக்கவேல் எனப் பெயரில் இருக்கும் அளவிற்கு ஏதாவது ஒன்றையாவது பேச வைத்திருக்கலாம்.

பொன் மாணிக்கவேல் - பொறுமையை சோதிக்காதீங்கப்பா...

 

பட குழுவினர்

பொன் மாணிக்கவேல்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

பிரபுதேவா

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படுவர் பிரபுதேவா. டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனான பிரபுதேவா, கர்நாடக மாநிலம், மைசூரில் 1973ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி பிறந்தார். தந்தையை போலவே பிரபுதேவாவும் நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு சின்ன வயதில் இருந்தே முறைப்படி நடனம் கற்றார்.

பரதநாட்டியம், வெஸ்டர்ன் என அனைத்து வித நடனங்களையும் ஆடும் ஆற்றல் பெற்ற பிரபுதேவா, சினிமாவில் ஒரு டான்ஸராகத்தான் அறிமுகமானார். ஆரம்பத்தில் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் பின்னர் ஓரிரு பாடல்களில் நடனமாடினார். பின்னர் இந்து என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரபுதேவா, தொடர்ந்து காதலன், மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

ஒருகட்டத்தில் நடித்தபடியே இயக்குநராகவும் களமிறங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் படங்கள் இயக்கியுள்ளார்.

100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன அமைப்பாளராக இருந்துள்ள பிரபுதேவா, சிறந்த நடன அமைப்புக்காக இரண்டு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

தான் காதலித்த ரமலத் என்ற பெண்ணையே திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு அப்பாவும் ஆனார். இதில் அவரது ஒரு மகன் கேன்சர் நோயால் இறந்து போனார். மகனின் மரணம் பிரபுதேவாவை பெரிதும் வாட்டியது.

இந்த சூழலில் நடிகை நயன்தாராவை காதலிக்க தொடங்கி, தான் காதலித்து மணந்த முதல் மனைவியான ரமலத்தை விவாகரத்தும் செய்தார். பின்னாளில் நயன்தாராவுடனான காதலும் முறிவுக்கு வந்தது.

மேலும் விமர்சனம் ↓