Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்,VETKATHAI KAETTAL ENNA THARUVAI
  • வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்
  • அசோக்
  • நடிகை:கிருத்திகா
  • இயக்குனர்: தபூ சங்கர்
28 மே, 2013 - 15:04 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்

   நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


பத்து ரூபாய்க்கு பஞ்சு மிட்டாய் வாங்கித்தர்றதுக்குக்கூட தகுதியே இல்லாத ஹீரோயினை ஹீரோ உருகி உருகி காதலிக்கறாரு. 2 பேரும் ஊரைச்சுத்தறாங்க. கல்யாணம்னு பேச்சு வரும்போது ஹீரோவைக்கழட்டி விட்டுட்டு பெரிய இடத்துல செட்டில் ஆகிடறாங்க ஹீரோயின். தான் ஏமாத்தா பட்டதா நினைக்கிற ஹீரோ தன்னோட நண்பனின் அறிவுரை படி இன்னொரு பெண்ணை காதலிக்கிற மாதிரி நடிக்கிறாரு. அப்புறமா என்ன நடந்தது? அப்டிங்கறதுதான் க்ளைமாக்ஸ் .

"பிடிச்சிருக்கு" பட ஹீரோ அசோக் தான் இதில் ஹீரோ. காதல் , கோபம் , சோகம் என எல்லா காட்சிகளுக்கும்  பெரிதாக ஏதும் அலட்டிக்கொள்ளவில்லை. சும்மா 10 நிமிஷம் வந்துட்டுப்போகும் ஏமாற்று காதலியாக  தர்ஷணா. சொல்லிக்கற அளவுக்கு ஒண்ணும் இல்லை. பிரதான  ஹீரோயினாக வரும்  கிருத்திகா  சின்ன சின்ன முக பாவனைகளில் பாஸ் மார்க்கைத்தாண்டி விடுகிறார். கஞ்சா கருப்பு , மயில் சாமி சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளில் கூட வறட்சியே எஞ்சி நிற்கிறது.

15 வருஷங்களுக்கு முன்னால தபு சங்கர் கவிதைகள் செம ஃபேமஸ். அவர் கவிதையை வெச்சே லவ் பண்ணுன ஆளுங்க பலர் உண்டு. ஒரு பிரபல வார இதழில் அவர் எழுதிய தொடர் கவிதைக்கு வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்?  என டைட்டில் வெச்சு செம ஹிட் ஆச்சு. ஆனா இந்த படத்துல ஒரு இயக்குனரா தபு சங்கர் சொதப்பி எடுத்திருக்காரு   

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படத்தின் டைட்டில் கவித்துவமாக இருப்பதும் , அது ஆல்ரெடி மக்கள் மனதை கவர்ந்திருப்பதும்

2. இது மலையாள டப்பிங்க் என்பது தெரியாத வண்ணம் போஸ்டர் டிசைன் வடிவமைத்தது

3. தரை டிக்கெட்  தரை டிக்கெட் குத்தாட்டப்பாட்டு இசை இமான் பெயரைக்காப்பாற்றுகிறது . செம ஹிட் சாங்க் . ஆனால் விழலுக்கு இறைத்த நீர் தான் 

4. காதலுக்கு ட்யூஷன் எடுக்கும் தபு சங்கர் டச் வசனங்கள்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. உண்மையான காதல் கொண்ட ஒருவன் தன் காதலி துரோகம் செய்தாலும் அவள் நினைவாகவும் , அவள் நல விரும்பியாகவும் தான் இருப்பான். சம்பந்தம் இல்லாம வேற ஒரு பொண்ணை லவ் பண்ணி ஏமாத்த நினைக்க அவன் ஒண்ணும் சைக்கோ இல்லையே?

2. படத்துக்கு முக்கிய சீனாக ஹீரோயின் முகத்தை ஹீரோ ஓவியமாக வரைவதும் நிலா ஓவியத்தில் ஹீரோயின் முகம் இருப்பதும் தான். ஒரு நல்ல ஓவியரை வைத்து அந்த காட்சியை மெருகேற்றி இருக்கக்கூடாதா? கிராஃபிக்ஸ் சொதப்பல்

3. ஹீரோவின் ஃபிளாஸ் பேக் கதையை அப்படியே காட்சியாக காட்டினால் போதாதா? எதுக்கு பின்னணியில்  செய்தி வாசிக்கற மாதிரி காட்சியை படிச்சு காட்ட ஒரு ஆள்?

4. க்ளைமாக்ஸில் இன்ஸ்பெக்டர் ஹீரோவைக்கொலை செய்ய நினைச்சா ஈசியா கொன்னிருக்கலாம். சும்மா 2 தட்டு தட்டிட்டு அப்டியே விட்டுடறாரு. ஹீரோ உயிர் பிழைச்சதும் அய்யய்யோ என அடிச்சுக்கறாரே? இவர் போலீஸ் சர்வீஸ்ல ஒரு ஆளை எப்படி அடிச்சா சாவான்?னு தெரியாதா? ஆள் இருக்கானா?  போய்ட்டானா? என செக் பண்ணக்கூட சோம்பேறித்தனமா?

5. கஞ்சா கருப்பு தனி காமெடி டிராக் படு திராபை . அவர் கத்தி கத்திப்பேசுவது சிரிப்பை வர வைப்பதற்குப்பதில் எரிச்சலைத்தான் வர வைக்குது.காமெடி டிராக்கையும் தபு சங்கரே எழுதி இருப்பது இன்னொரு கொடுமை

6. கதை , திரைக்கதை , வசனம் - தபு சங்கர். அப்படி இருக்கும்போது அனைவரும் அறிந்த  அவர் எழுதிய ஒரு கவிதையை ஹீரோயின் படிப்பதும் அட , இந்த வரி தபு சங்கர் எழுதியது என காட்சி வைப்பதும் தம்பட்ட காட்சி

7. காட்சிகள் ஒவ்வொன்றும் நாடகம் பார்ப்பது போல இருக்கு.  எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்  பின்னணி இசைக்கு இமான் கொஞ்சம் கூட மெனக்கெடவே இல்லை

8. லவ்வர் பாயாக வரும் ஹீரோ க்ளைமாக்ஸில் கேப்டன் ரேஞ்சுக்கு லெக் ஃபைட் போடுவதும், பேக் கிக் ,பறந்து பறந்து தாக்குவதும் பார்க்கும் போது லேசாக புன்னகை வந்து போகிறது

9. டைட்டிலில் இருக்கும் காதல் நயம்,  கவித்துவம் படத்தில் , திரைக்கதையில் பிரதிபலிக்க வில்லை

10. காதலியை லாரி விபத்தில் இருந்து காப்பாற்றி தான் அடிபடும் காதலனின் முயற்சி படு டிராமாடிக் சீன். படமாக்கப்பட்ட விதமும் மனம் கவரும் படி இல்லை

 மனம் கவர்ந்த வசனங்கள்


 1.காதல் அமைவதெல்லாம் காதல் கொடுத்த வரம்

 2. எனக்குன்னு தனி ஆசை ஏதும் இல்லை.உன் ஆசைகளை நிறைவேற்றுவதே என் ஆசை

 3. ஆண் அளவோட தண்ணி அடிக்க 1000 காரணம் இருக்கும்.ஆனா அளவில்லாம தண்ணி அடிக்க 2 காரணம் தான் 1 பொண்டாட்டி டார்ச்சர் 2 லவ் பெய்லியர்

 4. ஒரு பொண்ணுக்கு மேரேஜ் ஆனா 2 குடிகாரர்கள் உருவாகிறார்கள். 1 பழைய காதலன் 2 புது புருஷன்

 5.  காதல்ல விளையாடலாம், ஆனா கல்யாணத்துல? ஏன்னா அது சீரியஸ் மேட்டர்

6.  தப்பு பண்ணினவளுக்கே இவ்வளவ் நல்ல லைஃப் வரும்போது   நல்லவனுக்கு  ஏன் நல்ல லைஃப்   வரக்கூடாது?

7. ஆமா , நான் பொறுக்கி தான். லட்சக்கணக்கான பொண்ணுங்க இங்கே இருக்கும்போது உன்னை மட்டும் பொறுக்கி எடுத்து லவ் பண்ணினனே? நான் பொறுக்கிதான் .

8. உலகத்தையே மறந்து கிடப்பது ரொம்ப சுலபம், ஆனா காதலிச்ச பொண்ணை மறப்பதுதான் உலகத்துலயே ரொம்ப கஷ்டமான விஷயம்

09. நான் 5 பேரை லவ் பண்றேன் நவீன பாஞ்சாலியா? அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி ,தங்கை

10. ஆஹா, அவளை மடக்கறதுக்கு அவளே ஐடியா தர்றாளே?

11. பசங்களை அறையற பொண்ணுங்கதான் அவனை லவ்  பண்ணுவாங்க. இன்னைக்கு அறைவாங்க, நாளைக்கு லவ்வுவாங்க

12.  என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு அப்புறமாத்தானே கிஸ் பண்ணி இருக்கனும் ? எதுக்கு முன்னாடியே கிஸ் பண்ணினே?

13.  சிட்டில இருக்கும் பொண்ணுங்கள்ல இருந்து சின்னாளப்பட்டில இருக்கும் பொண்ணுங்க வரை காதல்னா வெட்கம் வரும்

14. எத்தனை நாள் ஆனாலும் கெட்டே போகாத பால் இன்பத்துப்பால்



வாசகர் கருத்து (1)

vasu - chennai,இந்தியா
29 மே, 2013 - 11:28 Report Abuse
vasu சொதப்பல், போர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in