Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சிவாய் (ஹிந்தி)

சிவாய் (ஹிந்தி),Shivaay
  • சிவாய் (ஹிந்தி)
  • அஜய் தேவ்கன்
  • எரிக்கா கார்
அஜய் தேவ்கன் நடித்து, இயக்கி, தயாரித்திருக்கும் படம் இது.
29 அக், 2016 - 12:05 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சிவாய் (ஹிந்தி)

அஜய் தேவ்கன், நடித்து, இயக்கி, தயாரித்து வெளியாகியுள்ள ஆக்ஷ்ன் திரைப்படம் ‛சிவாய்'. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...!

கதைப்படி, சிவாய் எனும் அஜய் தேவ்கன், ஒரு அசாத்திய மலையேற்ற வீரர். ஒருநாள் ஓல்கா எனும் எரிக்கா காரை சந்திக்க, அவர் மீது ஈர்ப்பு கொள்ள அவரை தன்னுடன் மலையை சுற்றி காட்டுகிறார். இருவருக்கும் காதல் வருகிறது, கல்யாணம் பண்ணாமலே வாழ்கிறார்கள். இவர்களுக்கு கெளரவா எனும் அழகான பெண் குழந்தை பிறக்கிறது. ஒருக்கட்டத்தில் ஓல்கா, சிவாய், கெளரவா இருவரையும் விட்டுவிட்டு பல்கேரியா செல்கிறார். கெளராவாவிற்கு ஒரு எட்டு வயது வரும்போது அம்மாவை பார்க்க வேண்டும் என்று சிவாயிடம் கூறுகிறார். ஓல்காவை தேடி அப்பாவும், பொண்ணும் பல்கேரியா செல்கிறார்கள். வந்த இடத்தில் கெளரவா, மர்ம நபர்கள் சிலரால் கடத்தப்படுகிறார். மகளை தேடி களமிறங்கும் அஜய்க்கு, அனுஷ்கா எனும் சாயிஷா ஷெகல் உதவுகிறார். அஜய், தன் மகளை கடத்தல்காரர்களிடமிருந்து மீட்டாரா, எதற்காக கெளரவா கடத்தப்பட்டார், மீண்டும் ஓல்கா எனும் எரிக்காவுடன் இணைந்தாரா...? என்பது ‛சிவாய்' படத்தின் பரபரப்பான ஆக்ஷ்ன் நிறைந்த மீதிக்கதை.

அஜய் தேவ்கன், சிவாய் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். எரிக்காவுடனான காதல் காட்சிகளில் ஆகட்டும், மகளை தொலைத்து பரிதவிக்கும் இடங்களிலாகட்டும், எதிரிகளை பந்தாடுவதிலாகட்டும் அனைத்திலும் ஜொலிக்கிறார்.

எரிக்கா கார், சாயிஷா ஷெகல் என இரண்டு ஹீரோயின்கள், இருவரும் தங்களை ரோலை பக்காவாக பொருந்தி நடித்திருக்கிறார்கள்.

நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார் அஜய். அதனால் தான் என்னவோ அவருக்கு கொஞ்சம் ஓவர் டோஸாக தெரிகிறது. கதை சிறப்பாகத்தான் உள்ளது, ஆனால் அதை சொல்ல வந்த திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளனர். படத்திற்கு பெரிய பலமே ஒளிப்பதிவு தான். அவ்வளவு அழகாக படமாக்கியிருக்கிறார் ஆசீம் பஜாஜ். படத்தொகுப்பையும், இசையையும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

படத்தின் முதல்பாதி மெதுவாக நகருகிறது, ஆனால் முதல்பாதியை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு பின்பாதியை விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் அஜய். அந்தவகையில் ஒரு இயக்குநராக அஜய்யை பாராட்டலாம். படத்தில் ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ‛சிவாய்' படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

மொத்தத்தில், ‛சிவாய் - அஜய்க்கு கொஞ்சம் ஓவர் டோஸ்'



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in