இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு த்ரிஷ்யம் 2 படத்தை ரீமேக் செய்து வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றார். அதை தொடர்ந்து தற்போது தமிழில் வெளியாகி ஹிட்டான கைதி படத்தை போலா என்கிற பெயரில் அவரே இயக்கி ரீமேக் செய்து அந்த படம் நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வரும் அஜய் தேவ்கன் பல சுவாரசியமான நிகழ்வுகளை கூறி வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜய் தேவ்கன் கூறும்போது, “சில வருடங்களுக்கு முன்பு ஒரு பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக கிளம்பிய அமிதாப்பச்சன் என்னை அழைத்து, அவரையும் பிக்கப் செய்து கொண்டு செல்லுமாறு கேட்டார். நானும் அவரை அழைத்துக்கொண்டு பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்று விட்டேன். அதன்பிறகு பார்ட்டி முடிய நீண்ட நேரம் ஆகும் என்பதால் எனது வண்டியை எடுத்து செல்லும்படி டிரைவரை அனுப்பி விட்டேன்.
ஆனால் பார்ட்டி நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் முடிந்து வெளியே வந்து பார்த்தால் என்னுடைய டிரைவர் அப்போதும் திரும்பி வந்திருக்கவில்லை. அதே சமயம் அங்கிருந்த நபர்கள் அமிதாப்பச்சனை நோக்கி வர ஆரம்பித்தனர். நான் உடனடியாக சுதாரித்து, அந்த பக்கமாக வந்து ஒரு ஆட்டோவை அழைத்து நாங்கள் செல்ல வேண்டிய ஹோட்டலின் அட்ரஸை அவரிடம் கொடுத்துவிட்டு அமிதாப்பச்சன், நவ்ஷாத் அலி ,சோனாலி பிந்த்ரே ஆகியோரை ஆட்டோவில் ஏற்றி நானே ஓட்டிக்கொண்டு அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று விட்டேன். என்னை நம்பி ஆட்டோவை ஒப்படைத்து விட்டு பின்னாடியே அந்த ஹோட்டலுக்கு வந்த அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு நிறைய பணமும் கொடுத்தேன்” என்று பழைய நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆனாலும் நெட்டிசன்கள் சிலர், ஏங்க இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்றும், இந்த ஸ்டோரி சூப்பராக இருக்கிறது இதுபோல இன்னும் நிறைய சொல்லுங்கள் என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.