2.75

விமர்சனம்

Advertisement

விக்ரம்பிரபு நிக்கி கல்ராணி நடிப்பில் புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபுவின், சொந்தத் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'நெருப்புடா'. தீயணைப்பு வீரர்களின் வாழ்க்கையை பற்றிய படம் என்று சொல்லப்பட்டது.

விக்ரம் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் நால்வரும் சிறுவயதில் இருந்தே அவர்களது பகுதியில் நடக்கும் தீ விபத்துகளில் துணிச்சலாக நுழைந்து உயிர்களை காப்பாற்றுபவர்கள். தீயணைப்பு வீரர்கள் ஆவதற்கான தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருப்பவர்கள் தேர்வுக்கு முதல் நாளில் ஒரு விபத்துக்கு காரணமாகிறார்கள். அந்த விபத்தின் விளைவுகள் தான் கதை.

ஒரு அரதப் பழைய கதையை கையில் எடுத்து அதில் ஒவ்வொரு காட்சியிலும் டுவிஸ்ட்களால் திரைக்கதையை நிரப்பியிருக்கிறார் இயக்குநர் அசோக் குமார்.

தீயணைப்பு வீரராவதையே லட்சியமாக கொண்டு நண்பர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் கேரக்டர் விக்ரம்பிரபுவுக்கு. கும்கி படத்துக்கு பிறகு தனது இறுக்கமான நடிப்பால் அழுத்தமாக முத்திரை பதிக்கிறார்.

நிக்கி கல்ராணிக்கு அதிகம் வேலையில்லை. விக்ரம் பிரபுவை காதலிப்பதும் அவருடன் டூயட் பாடுவதற்கு மட்டும் பயன்பட்டிருக்கிறார்.

வில்லனாக மிரட்டியிருக்கிறார் மதுசூதன் ராவ். ஐசரி வருண், நாகி நீடு, பொன்வண்ணன் ஆகியோர் கச்சிதம். மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

ஆர்டி ராஜசேகரின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் படத்திற்கு த்ரில் டெம்போவை கூட்டுகிறது.

லாஜிக்கலாக கேள்விகள் வந்துவிடாமல் டுவிஸ்ட்களாலேயே படத்தை கோர்த்திருக்கிறார் இயக்குநர். அதற்கு பெரிதும் உதவியிருக்கிறது தியாகுவின் எடிட்டிங். அந்த க்ளைமாக்ஸ் டுவிஸ்ட் யாரும் எதிர்பாராதது.

இன்னும் சுவராஸ்யமான கதையை உருவாக்கி இருந்தால் நெருப்புடா பெரிய ஹிட் அடித்திருக்கும். ஆனால் மோசமான படம் இல்லை. த்ரில்லர் பட விரும்பிகள் பார்க்கலாம்.

மொத்தத்தில், "நெருப்புடா - அதிக சூடு இல்லை".

 

நெருப்புடா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நெருப்புடா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓