Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கில்லிங் வீரப்பன்

கில்லிங் வீரப்பன்,Killing Veerappan
  • கில்லிங் வீரப்பன்
  • இயக்குனர்:
09 ஜன, 2016 - 17:15 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கில்லிங் வீரப்பன்

நடிகர்கள் : சிவராஜ்குமார், சந்தீப் பரத்வாஜ், யகானா ஷெட்டி, பருல்யாதவ்.

இயக்குநர் : ராம் கோபால் வர்மா


ஒரு கவனிக்க தக்க கதையுடன் களமிறங்கி இருக்கிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா, நீண்ட நாட்களுக்கு பிறகு ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ராம் கோபால் வர்மா இப்படி ஒரு பிரச்சனைகள் நிறைந்த கதையை கையில் எடுத்திருக்கிறார்.


கில்லிங் வீரப்பன் திரைப்படத்தில் கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் நாயகனாக நடித்துள்ளார். டிரைலரில் மிரட்டிய ராம் கோபால் வர்மா திரைப்படத்தில் எந்த அளவு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் என்று பார்ப்போம்


இது ஒன்றும் வீரப்பனின் வாழ்க்கை சரிதை அல்ல, ஒரு போலீஸ்காரரின் பார்வையிலேயே கதை கையாளப்பட்டிருக்கிறது. வீரப்பன் ஒரு கடத்தல்காரன் அவன் மீது கணக்கிலடங்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவனை பிடிக்க மூன்று மாநில போலீஸ் படைகளும் முயற்சி செய்கின்றன. அவனை பிடிக்க பல்வேறு சூழ்ச்சிகளை செய்யும் போலீஸின் கையில் அவன் மாட்டவே இல்லை. இப்படி இருக்கையில் உயர் போலீஸ் அதிகாரி விஜய் குமார் அவனை பிடிக்க பல்வேறு திட்டம் தீட்டுகிறார். இறுதியில் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.


முக்கியமான விசயம் வீரப்பனாக நடித்திருக்கும் நபர் இந்த படத்தில் தான் அறிமுகமாகிறார். உருவம் மட்டுமல்லாது அவரது உடல் மொழியும் கூட நிஜ வீரப்பனை ஒத்து இருப்பது கூடுதல் பலம். ராம் போபால் வர்மா பார்த்து பார்த்து கதாபாத்திரத்திற்கு ஆட்களை தேர்வு செய்திருக்கிறார். எல்லாருமே தங்கள் காட்சிகளுக்கு சரியாக பொருந்துகிறார்கள். விரைப்பும் முறைப்புமான வீரப்பன் கிளாஸ்.


சிவராஜ் குமார் போலீஸ் அதிகாரியாக கட்சிதமாக பொருந்திப்போகிறார். தெலுங்கு தேசத்திற்கு புதுசுதான் என்றாலும். திரைக்கதையின் வேகம் கதாபாத்திர ஆராய்ச்சியை தவிர்கிறது.


வீரப்பனை பிடிக்க/கொல்ல போலீஸ் விரிக்கும் ஒவ்வொரு திட்டத்தையும் லாவகமாக அவன் முறியடிக்கும் போது ரசிகர்களை கவரவும் அவன் தவருவதில்லை. இப்படி காட்சிகளை வடிவமைத்தமைக்கு வர்மாவை தனியாக பாராட்டவேண்டும். இவை படத்தின் நம்பகத்தன்மையைக் கூட்ட பெரிதும் உதவுகின்றன, எடுத்துக்கொண்ட கதைகளத்திற்கு ஏற்ப எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் படத்தின் இறுதியில் வரும் டாப் ஆங்கிள் காட்சிகளை சொல்லலாம். பின்னணி இசை இன்னும் இசைத்திருந்தால் வீரப்பன் இன்னும் உயிர்ப்புடன் இருந்திருப்பான்.


எடுத்துக்கொண்ட கதையை ஒருவித த்ரில்லர் பாணியில் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். வீரப்பனின் தனிப்பட்ட வாழ்க்கை அவன், வளர்ந்த விதம் என எதுவும் படத்தில் கிடையாது. முழுக்க முழுக்க போலீஸின் பார்வையிலேயே கதை நகர்கிறது. மொத்தமாக வீரப்பனின் கதை பாதி அளவேனும் துப்பாக்கிகளுடன் சொல்லப்படிருக்கிறது.


கில்லிங் வீரப்பன் - ராம் கோபால் வர்மாவின் பெயர் சொல்லும்



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in