தினமலர் விமர்சனம்
சிவா , அசோக் செல்வன் என இரு நாயகர்கள் ., ஓவியா , ஸ்ருதி ராமகிருஷ்ணன் என இரண்டு நாயகியர் ... நடிக்க, மதுரை பக்கத்து களவாணி தனத்தையும், இரு கிராமங்கள் இடையே பரம்பரை சண்டையை உண்டாக்கி ,கலெக்டரின் தடை உத்தரவுக்கு வழி கோலிய மீன் பிடித்திருவிழாவையும் பற்றி காமெடியாக, கலர்புல்லாக பேசியிருக்கும் படம் தான் 144 மொத்த படமும்!
மதுரை, திருமங்கலம் பக்கம் எரிமலைக் குண்டு , பூமலைக்குண்டுன்னு இரண்டு கிராமங்கள் . இரண்டு கிராமத்திற்கும் பொதுவான குளத்தில் ஊர் மீன்பிடித்திருவிழாவின் போது ,யார் முதலில் மீன்பிடிப்பது ? எனும் மோதல் ... தாத்தாவுக்கு தாத்தா காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. .. வருஷத்திற்கு. ஒரு முறை அந்த மோதல் வந்து , வந்தும் போகிறது. அதுமாதிரி நேரங்களில் கலெக்டர் 144 தடை உத்தரவு போட ,இரண்டு ஊரும் போலீஸ் பந்தோபஸ்த்துடன் அமைதியாக கிடக்கின்றன. அது மாதிரி ஒரு தடை உத்தரவு சமயத்தில் ., அந்த ஊர் பெரிய மனிதரின் நகைக்கடையில் அதே ஊரைச் சார்ந்த பூட்டுக்கு கள்ள சாவி போடும் சிவா , தன் வுட்பி ஓவியாவுடன் சேர்ந்து பெரிதாக கொள்ளையடிக்கிறார். அதே நாளில் அந்த நகைக் கடை பெரிய மனிதரிடம் ., பெரிய கார் ரேஸராக வரவேண்டும் எனும் லட்சியத்துடன் டிரைவராக வேலை பார்க்கும் ரமேஷ் செல்வன் , பெரிய மனிதரின் மகளை இழுத்துக் கொண்டு ஓடிப் போகிறார். ஏற்கனவே கேரளா பார்ட்டி ஒருவரின் பல கோடி மதிப்புள்ள கோல்டு பிஸ்கெட்டுகளை லபக்கிவிட்டு ஒரு சைலண்ட் அதே நேரம் வயலண்ட் வில்லனிடம் வகையாக சிக்கி அந்த பிஸ்கெட்டுகள் போன இடம் தெரியாமல் தவிப்பில் இருக்கும் அந்த நகைக் கடை அதிபர் ., சிவா , ரமேஷ் செல் வனுடன் சேர்ந்து தனக்கு துரோகம் செய்த உதவியாளர் முனிஷ் காந்த் - ராமதாஸையும் வஞ்சம் தீர்த்தாரா? அல்லது , சைலண்ட் - வய லண்ட்டிடம் சிக்கிய நகை கடை பெரிய மனிதரை இவர்கள் மூவரும் சேர்ந்து மீட்டு தங்கள் பாவத்திற்கு பிரயாசித்தம் தேடினார்களா ? என்பதை காமெடியாகவும் சற்றே கடியாகவும் சொல்கிறது 144 படத்தின் மீதிக் கதை!
பூட்டிற்கே தெரியாமல் கள்ளச்சாவி போடும் தேசுவாக சிவா , மதுரை தமிழ் பேச ரொம்பவே கஷ்டப்பட்டாலும் களவாணித்தனத்தில் தூள் பரத்தியிருக்கிறார்.
தன் காரில் முதலாளி ஒளித்து வைத்து கடத்தும் பொருட்கள் பற்றி தெரியாது முதலாளி மகளையே காதலித்து கடத்தும் கார் ரேஸ்ராக வேண்டும் எனும் வெறியுடைய ரமேஷ் செல்வனும் கச்சிதம்!
திருமங்கலம் ஏரியாவே திரும்பி பார்த்த விலைமாதுப் பெண்ணான ஓவியா வை, சிவா, தன் வுட்பி யாக ஏற்றுக் கொள்வதற்கு எந்த காரணமும் பெரிசாக இல்லாதது சறுக்கல்! அதே நேரம் ஓவியா அந்த மாதிரி பெண்ணாக செம கலக்கல்!
மற்றொரு நாயகியும் ரமேஷ் செல்வனின் காதலியுமான ஸ்ருதி ராமகிருஷ்ஷும் செம்கேரக்டர் சாய்ஸ் !
வாய் பேச முடியாத , காது கேளாத மாற்றுத்திறனாளி ., களவாணி திறமைசாலியாக முனிஷ் காந்த் - ராமதாஸ் , நகைக் கடை பெரிய மனிதராக மதுசூதனன் , சைலண்ட் - வய லண்ட் சைக்கிக் வில்லனாக உதயபானு மகேஸ்வரன் ,சுஜாதா , ரத்தினசாமி , ஹலோ கந்தசாமி எல்லோரும் நச்சென்று நடித்திருப்பதே சில இடங்களில் ஒ வர்டோ ஸாகி விடுவது பலவீனம். . இவர்கள் எல்லோரையும் காட்டிலும் பேயாமல் (பேசாமல்... ) பல கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை முழுங்கிவிட்டு அமைதியாக இருக்கும் பிள்ளையார் மற்றும் மூஞ்சு எலி சிலை ஹாஸ்யம் , சுவாரஸ்யம்!
ஆர்.பி .குரு தேவின் கிராமியமணங்கமழும் ஒளிப்பதிவு , சான்ரோலனின் அதிரடி இசை , லியோ ஜான்பாலின் இன்னும் கத்திரி பட்டைத் தீட்டப்பட வேண்டிய படத்தொகுப்பு , ஏ. கோபி ஆனந்தின் உள் அறைகள் நிரம்பிய மூஞ்சூறு, பிள்ளையார் சிலை செட்டுகள் ... உள்ளிட்ட ப்ளஸ் மற்றும் மைனஸ் பாயிண்ட்டுகள் ஜி. மணிகண்டனின் எழுத்து , இயக்கத்தில் ஆங்காங்கே இருக்கும் சிரிப்பு வெடி களுக்காக "144 " படத்தை உயர்த்திப் பிடிக்கின்றன.
143க்கு (காதலுக்கு...) இப்படத்தில் பெரிதாக முக்கியத்துவம் இல்லாமல் , அதற்கு 144 போட்டுவிட்டது போல் , நல்ல வேளை , களவாணித்தனம் தான் கான்செப்ட் என, இப்பட இயக்குனர் , காமெடிக்கும் 144 போடாமல் விட்டதால் , 144 " படத்தை ஒரளவிற்காவது ரசிக்க , சிரிக்க முடிகிறது!
ஒரு வரியில் சொல்வதென்றால் ., "ஒன் பார்ட்டி போர் (144) _ஓ.கே. நாட் போர்!