"வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற தலைப்பு கலோக்கியலாக இருந்தாலும் படம் சீரியசான மேட்டரை பேசுகிறது. அது கந்து வட்டி கொடுமை. கந்து வட்டி ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி புரட்டி போட்டு எங்கே கொண்டு போய் நிறுத்துகிறது என்பதை யதார்த்தமாக சொல்கிறோம்" என்கிறார் இயக்குனர் அபிநந்திரன். ராஜீவ் மேனனிடம் சினிமா கற்று வந்திருக்கிறார்.
"ஒருவன் வாழும் சூழ்நிலையே அவன் மீதான மதிப்பீடுகளை உருவாக்கிறது. அவனது குணமோ, பணமோ அல்ல. இந்த உண்மையையும் சேர்த்து சொல்லும் படம். மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இப்படி தலைப்பு வைக்கவில்லை. படத்திற்கும் தலைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது" என்கிறார் அபிந்திரன்.
பிரவீன்குமார், ஷாலினி வட்னிகடி ஹீரோ, ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். கார்த்திக்குமார், சனம் ஷெட்டி, பால சரவணன், ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். பைவ் ஸ்டார் கிருஷ்ணா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சாரங்கராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். காதல் படத்துக்கு இசை அமைத்துவிட்டு காணாமல் போன ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மா தயாரிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.