Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்-7 (ஹாலிவுட்)

பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்-7 (ஹாலிவுட்),Fast and Furious 7
 • பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்-7 (ஹாலிவுட்)
 • வின் டீசல்
 • பால் வாக்கர்
பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படங்களின் வரிசையில் வந்திருக்கும் ஏழாம் பாகம் தான் இப்படம்.
08 ஏப், 2015 - 11:46 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்-7 (ஹாலிவுட்)

ஏற்கனவே ஹாலிவுட்டில் வெளியாகி, வசூலை குவித்த, 'ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் பாகங்களின் தொடர்ச்சியாக ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் 7' சமீபத்தில் வெளியாகியுள்ளது. 6ஆம் பாகத்தில் தனது அண்ணனை கொன்ற குழுவினரை பழிவாங்க தனி ஆளாக கிளம்பி வருகிறான் அவனது தம்பி.. இதுதான் படத்தின் மையக்கரு. இதற்குள் ஒரு கடத்தல், மீட்பு சாகசங்களை வைத்து ஜமாய்த்திருக்கிறார்கள்.


உலகத்தின் எந்த மூலையில் யார் ஒளிந்திருந்தாலும் கண்டுபிடித்துவிடக்கூடிய சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றை கண்டுபிடித்துள்ள ராம்சி என்கிற பெண்ணை தீவிரவாத கும்பல் ஒன்று கடத்துகிறது. அந்த புரோகிராம் தீயவர்களின் கைக்கு போகும் முன் மீட்கவேண்டும் என்பதற்காக, அமெரிக்க சீக்ரெட் புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரியான கர்ட் ரஸ்ஸல், அதிரடி நாயகன் வின் டீசலை அழைத்து அந்த பொறுப்பை ஒப்படைக்கிறார்.


இந்த சூழலில் 6ஆம் பாகத்தில் பாகத்தில் வின் டீசல் குரூப்பால் கொல்லப்பட்ட வில்லன் எவன்ஸ் சார்பில், அவனது சகோதரன் ஜேசன் ஸ்டேதம் வின் டீசல் குழுவை பழிவாங்க புறப்படுகிறார். முதலில் இந்த குழுவில் உள்ள ராக்கை காயப்படுத்துகிறார்.. அவருக்கு ஆதரவு கொடுக்க முன் வருகிறான் தீவிரவாதி ட்ஜிமான் ஹன்சூ. அவன்தான் அந்த அந்த புரோகிராமிற்காக ராம்சியை கடத்தியவன்.


அதன்படி, வின் டீசல் தனது குழுவுடன் தீவிரவாதியின் பிடியில் இருக்கும் ராம்சியை மீட்க கிளம்புகிறார். ராம்சியை மீட்பது, ராம்சியிடமிருந்து கைமாறிய புரோகிராமை கைப்பற்றுவது, மீண்டும் வில்லன் வசம் சிக்கிய அந்த புரோகிராம் மூலமாகவே தங்களை அழிக்க நினைக்கும் வில்லனுடன் மோதி அவனை கொல்வதுடன், அந்த புரோகிராமையே ஹேக் செய்வது என இரண்டுமணி நேரம் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்த மாதிரி பட்டையை கிளப்பியுள்ளார்கள்.


'ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்' படத்தின் முந்தைய பாகங்களில் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் இருக்கும். அதேபோல் இந்த 7ஆம் பாகத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. இரண்டு மணி நேரமும் சோர்வடைய வைக்காமல் ஆக்ஷன் காட்சிகளால் தொடர்ந்து நம்மை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.


ஃபாஸ்ட் திரைக்கதையும் காட்சியமைப்பும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. சாகசக்காட்சிகள் தான் படத்தின் பிரதானமே. ராம்சியை மீட்பதற்கான ஆபரேசனில் வின் டீசல் குழுவினர் விமானத்தில் இருந்து ஒவ்வொரு கார் மூலமாக பூமியில் விழும் காட்சி அபாரம்.. அதே மீட்பு பணியில் எதிரிகளின் பஸ்ஸில் இருந்து ராம்சியை காப்பற்றும் பால் வாக்கர் அந்த பஸ்ஸில் சிக்கிக்கொள்வதும். அதல பாதாளத்தை நோக்கி சரியும் பஸ்ஸில் இருந்து தப்பிப்பதும் மயிர் கூச்செறிய வைக்கும் காட்சிகள். வின் டீசலுக்கும், ஜேசன் ஸ்டேதமுக்கும் மலைப்பாதையில் நடக்கும் கார் சேசிங் காட்சி மிரட்டலோ மிரட்டல்.


அடுத்ததாக அபுதாபியில் பல கட்டிடங்களுக்கிடையே காருடன் பாயும் வின் டீசலின் சாகச ட்ரைவிங், தன்னை பஸ்ஸில் சிக்கவைத்த டோனி ஜாவுக்கு பதிலடி தரும் விதமாக பால் வாக்கர் அவருக்கு தரும் தண்டனையும் சூப்பர் ரகம். வில்லன் ஹெலிகாப்டரில் அமர்ந்தபடி இந்த குழுவினர் எங்கே சென்றாலும் வேட்டையாட, அதிலிருந்து ராம்சியை காப்பற்ற, வேகமாக செல்லும் ஒரு காரிலிருந்து இன்னொரு காருக்குள் மாற்றும் லாவகம் இவற்றிற்கே கொடுத்த காசு சரியாக போய்விடுகிறது.


கடைசியில் இக்கட்டான நேரத்தில் ரெஸ்லிங் மன்னன் ராக் கைகொடுக்க ஹெலிகாப்டர் வில்லன் வானத்திலே பஸ்பம் ஆகிறான். ஜேசன் ஸ்டேதம் வின் டீசலிடம் வாங்கி கட்டிக்கொண்டு உயிரைவிடுகிறார் பாவம்.. இறுதிக்காட்சியில் வின் டீசலின் குறும்பு ரசிக்க வைக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு விஷுவல் டிரீட்டாக அமைந்திருக்கிறது. படத்தின் முதல் நிமிடம் முதல் இறுதிக்காட்சி வரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அளவுக்கு படத்தின் காட்சிகள் வேகமாக செல்கின்றன.


கார் ஒட்டி சாகசம் செய்வது மட்டுமல்லாமல் எதிரி பெண்ணுடன் அசத்தல் சண்டையிடும் மிச்செல், பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக் என்கிற ரேஞ்சில் கிப்சன் அடிக்கும் லூட்டி, வின் டீசலின் அமைதியான ஆனால் தீர்க்கமான செயல்பாடுகள், பால் வாக்கரின் பக்குவமான ஆக்சன், டோனி ஜாவின் அதிரடி சண்டை, ஜேசன் ஸ்டேதம் காட்டும் குரூரம் என படத்தில் நடித்துள்ள அனைவரின் நடிப்புத்திறனைப் பற்றி தனித்தனியாக பாராட்ட தேவையில்லை எனும் அளவுக்கு அனைவரும் அவரவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.


இத்தனைக்கும் ஆறாவது பாகத்துடன் முந்தைய இயக்குனர் ஜஸ்டின் லின் விலக, 7ஆம் பாகத்தில் புதிதாக வந்த ஜேம்ஸ் வான் இந்த படத்தின் மூலம் தனி முத்திரை பதித்து விட்டார் என்றே சொல்லலாம். ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் அனைத்து பாகங்களிலும் இடம் பெற்ற பால் வாக்கர் இந்தப்படத்தில் நடித்த சமயத்தில் எதிர்பாராத விபத்தில் இறந்தபொழுது இந்த பாகம் வராது என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, தற்போது வெளியான இந்தப்படம் பால் வாக்கருக்கே அர்ப்பணிக்கும் விதமான படமாக அமைந்திருக்கிறது.


மூன்று மிகப்பெரிய சாகச காட்சிகளை வைத்து, ரசிகர்களுக்கு தீனி போட்டு இரண்டு மணி நேரம் உட்காரவைத்த 'ஃபாஸ்ட் அன்ட் பியூரியஸ் 7' படத்தை எத்தனை முறை பார்த்தாலும் போராடிக்க வாய்ப்பே இல்லை.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in