Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

ராஜதந்திரம்

ராஜதந்திரம்,Rajathandhiram
புதியவர் அமீத் ஏ.ஜி.யின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘‘ராஜதந்திரம்’’
18 மார், 2015 - 15:02 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ராஜதந்திரம்

கேடி பில்லா கில்லா ரங்கா ரெஜினா, ஆடுகளம் நரேன், இளவரசு தவிர, கதாநாயகர், காமெடியன் உள்ளிட்ட பிறநட்சத்திரங்கள் அனைவரும் புதுமுகங்கள், ஆனாலும் மதன்கார்க்கியின் பாடல் வரிகள், ஜி.வி.பிரகாஷின் இசை, எஸ்.ஆர்.கதிரின் ஔிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், அமர்க்களமாக பிரேம் டூ பிரேம் பிரமாண்டமாக வௌிவந்திருக்கும் படம் தான் ராஜதந்திரம்.


கதைப்படி, சின்ன சின்ன திருட்டுகள் செய்து ஜீவனம் நடத்தி வரும் அர்ஜூன்(வீரா), தேவராஜ்(அஜெய் பிரசாத்), குள்ளன்(டம்புகா சிவா) உள்ளிட்ட மூவரும் ஒரே அறைவாசிகள். இந்நிலையில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பைனான்ஸ் கம்பெனி ஒன்றில் பணத்தை போட்ட அப்பாவை இழந்து அவர் கடனை சுமந்து திரியும் மிச்செல்(ரெஜினா)லின் நட்பு அர்ஜூனுக்கு கிடைக்கிறது.


அப்பா விட்டுச்சென்ற கடனை அடைக்க செயின் லிங்க் பிஸினஸூக்கு ஆள்பிடிக்கும் மிச்செல், அர்ஜூனையும் அந்த வலைக்குள் இழுக்கிறார். மிச்செல் மீது ஒன்சைடு காதலில் இருக்கும் அர்ஜூனும், அம்மணியை தன் காதல் வலையில் விழ வைக்க வேண்டி அந்த பிஸினஸில் சேருகிறார். ஆனால் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே இதெல்லாம் ஒரு பொழைப்பா.? என அலுக்கும் அர்ஜூன், நாயகியின் கடனை அடைக்க பெரிதாக ஒரு திருட்டு நடத்த தன் அறை நண்பர்களுடன் களம் இறங்குகிறார். அது பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதையாக... அடுத்து மேலும் ஒரு பெரும் திருட்டு - புரட்டுக்காக வெயிட்டிங்கில் இருக்கும் போது, போர்ஜரி டாக்குமெண்ட்ஸ் புகழ் மாதவ ஐயர்(இளவரசு) வாயிலாக தர்மா (ஆடுகளம் நரேன்) அர்ஜூன் அண்ட் கோவினரை அணுகுகிறார்.


தர்மாவின் திட்டம், தன்னை பைனான்ஸ் கம்பெனி நடத்த சொல்லி ஏமாற்றி, தன் செல்வத்தையும், செல்வாக்கையும் சரித்து சிறைக்கு அனுப்பிவிட்டு பிரபல ஜூவல்லரி அதிபராக செல்வாக்கோடும், செல்வத்தோடும் திகழும் அழகப்பனின்(பட்டியல் படத் தயாரிப்பாளர் சேகர்) நகைக்கடையை கொள்ளை அடித்து, அதன்மூலம் இழந்த எல்லாவற்றையும் மீட்டு தன் பைனான்ஸ் கம்பெனியில் இழந்தவர்களுக்கு செட்டில் செய்துவிட்டு, தானும் மீண்டும் செல்வாக்குடன் செட்டிலாக வேண்டும் என்பது தான் தர்மாவின் திட்டம். அந்த திட்டத்தை எவ்வாறு தங்கள் தந்திரத்தின் மூலம் செயல் வடிவாக்குகிறார்கள் ஹீரோ அர்ஜூனும், அவரது திருட்டு நண்பர்களும் எனும் கதையுடன், இவர்களது இந்த திருட்டு, புரட்டு செயலால் ஹீரோயினுக்கும் எவ்வாறு.? நியாயமும், அவரது அப்பா இழந்த பணமும் கிடைக்கிறது...? எனும் கதையையும் கலந்துகட்டி ராஜதந்திரம் படத்தை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் தந்திருக்கிறார்கள்!


அர்ஜூனாக கதாநாயகராக வீரா அம்சமாக நடித்திருக்கிறார். ஹீரோ என்றால் அதிரடி ஆக்ஷனில் இறங்கி எதிர்படுபவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்ய வேண்டும் என எண்ணாமல், தனது புத்திசாலிதனத்தால் வீரா செய்யும் செயற்கரிய காரியங்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருப்பது ராஜதந்திரம் படத்தின் பெரும் ப்ளஸ்!


அர்ஜூன் - வீராமாதிரியே, தேவராஜாக வரும் அஜய் பிரசாத்தும் ஸ்கிரீனில் வந்தாலே சிரிப்புமூட்டும் தோற்றமுடைய குள்ளன் - டம்புகா சிவாவும் கூட தங்கள் பாத்திரம் பலே பலே சொல்லுமளவிற்கு நடித்திருக்கின்றனர்.


நாயகி மிச்செல்லாக வரும் ரெஜினா, குடும்ப கஷ்டத்தை காட்டிக்கொள்ளாமல், மல்டிலெவல் மார்க்கெட்டிங்கிற்கு ஆள் பிடிக்கும் விதமும், அம்போன என விட்டுப்போன அப்பாவின் கடன்காரர்களை சமாளிக்கும் திறனும், கண்டபடி பேசும் இளவட்டங்களை கண்டு கொள்ளாமல் செயின் லிங்கில் இழுத்து விடும் சாமார்த்தியமும் ராஜதந்திரம் படத்தின் மேலும் சுவாரஸ்யங்கள்!


நகைக்கடை முதலாளி அழகப்பனாக பட்டியல் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் சேகர், அவரால் செல்வாக்கையும், செல்வத்தையும் இழந்த பைனான்ஸ் கம்பெனி முதலாளியாக ஆடுகளம் நரேன், அவரது விதியை மதியால் வெல்ல உதவும் டூப்ளிக்கெட் டாக்குமெண்ட் தயாரிப்பாளர் மாதவ ஐயர் - இளவரசு, மூர்த்தியாக வரும் செந்தில் வீராசாமி உள்ளிட்டவர்களும் ராஜதந்திரத்தில் தங்களது தந்திர நடிப்பால் ஜொலித்திருக்கின்றனர்.


மதன் கார்கியின் பாடல்வரிகளும், ஜி.வி.பிரகாஷின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும், எஸ்.ஆர்.கதிரின் அழகிய ஔிப்பதிவும், புதியவர் அமீத் ஏ.ஜி.யின் எழுத்து இயக்கத்திற்கு பக்காவாக கை கொடுத்து, ராஜதந்திரத்தை இந்தவாரத்தின் ராஜகம்பீரமாக மிளிர செய்திருக்கின்றன என்றால் மிகையல்ல!


மொத்தத்தில், இன்சூரன்ஸ்க்காக நகைக்கடை அதிபர்கள் உள்ளிட்ட தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் செய்யும் தகிடுதித்தங்களை, அழகிய காதல் கதையுடன் புத்திசாலித்தனமாக பறைசாட்டியிருக்கும், ராஜதந்திரம் - ராஜகம்பீரம்!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in