Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

காதல் சொல்ல நேரம் இல்லை

காதல் சொல்ல நேரம் இல்லை,Kadhal solla neram illai
  • காதல் சொல்ல நேரம் இல்லை
  • உதயகுமார் (புதுமுகம்)
  • இனியா
  • இயக்குனர்: ஸ்ரீநிவாசன்
01 மார், 2015 - 15:33 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » காதல் சொல்ல நேரம் இல்லை

ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் சார்பில் ராமாபுரம் ராஜேஷ், மற்றும் ஸ்ரீசினி கிரியேசன்ஸ் இணைந்து தயாரிக்கிற படம் காதல் சொல்ல நேரமில்லை. புதுமுகம் உதயகுமாருக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். குமார் பாண்டியன் இசையையும், ராஜ்குமார் ஒளிப்பதிவையும் கவனிக்கிறார்கள். ஸ்ரீநிவாசன் டைரக்ட் செய்கிறார்.

இது ஒரு பிளே பாய் கதை என்கிறார் ஸ்ரீநிவாசன். மேலும் அவர் கூறியதாவது: சில பேர் தங்களை அழகனாவும், மன்மதனாகவும் நினைத்துக் கொண்டு பார்க்கிற பெண்களையெல்லாம் படுக்கையில் வீழ்த்திவிட வேண்டும் என்று நினைப்பார்கள். முடியாவிட்டாலும் வீழ்த்தி விட்டதாக பெருமையாக சொல்லிக் கொண்டு திரிவார்கள். இப்படிப்பட்ட பிளே பாய் குணம் படைத்த ஒருவன் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சிக்கல்களை சந்திக்கிறான். அவனை ஒரு பெண் எப்படி மீட்கிறாள். அதன் பிறகு அவன் பெண்ணின் பெருமையை எப்படி உணர்கிறான் என்கிற கதை.

இதனை விரசம் இல்லாமல் ஜாலியாக எடுத்திருக்கிறோம். இனியா ஹீரோயினாக நடித்திருக்கிறார். வாகைசூடவாவுக்கு பிறகு அவருக்கு இந்தப் படம் பெயர் சொல்வதாக அமையும். சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கேரளா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம். என்றார்.


Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in