விமர்சனம்
நாயகன் குருவாக புதுமுகம் குருவே நடித்திருக்கிறார். பழகிய முகம் இல்லை என்றாலும் நடிக்கத் தெரிந்த புதுமுகம்! புதுமுக நாயகி ஆஷாவும் பேஷா நடித்திருக்கிறார். மலேசிய நடிகை சாரா, ஒத்தப்பாட்டுக்கு குத்து டான்ஸ் போட்டிருக்கும் வாள மீனு மாளவிகா, லக்ஷா என நடிகைகள் அனைவரும் நம் கவனத்தை கவருகிறார்கள். ஆனால் போலீஸ் அதிகாரியாக வரும் தென்னவனைத் தவிர கஞ்சா கருப்பு, மயில்சாமி, முத்துக்காளை, பெஞ்சமின், கொட்டாச்சி உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் காமெடி எனும் போர்வையில் கடித்து... குதறி... கடுப்பேற்றுகின்றனர்.
குரு - ஆஷா ஜோடியின் காதல் காட்சிகளும், ஊர் பெரிய மனிதர் மற்றும் அவரது வாரிசின் வில்லத்தனங்களும் பல படங்களில் பார்த்து பார்த்து சலித்துப் போன காட்சிகள் என்பதால் சுத்த போர். அவற்றை எடிட்டர் சுரேஷ்ராஜன் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். புதியவர் ஆழ்வார்ஸ்ரீயின் இசையில் பாடல்கள் இனிமை! பின்னணி இசை பழமை! வில்லாளனின் ஒளிப்பதிவில் வித்தியாசமாக எதுவுமில்லை.
கே.பி.சர்வ தீர்த்தவனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்துள்ள ஆறுபடை படத்தில் கதையிலும், திரைக்கதையிலும் இருக்கும் புதுமைகூட வசனத்திலும், இயக்கத்திலும் இல்லாதது கொடுமை!
ஆறுபடை : சினிமாவின் புறநானூற்று அகநானூற்று காலத்து பழைய படை.














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!