குல்ஷான் தேவைய்யா, ராதிகா ஆப்தே, சாய் தம்ஹான்கர், சாகர் தேஷ்முக், வீரா சக்சேனா, ரசேல் டி சோஷா
டைரக்டர்- ஹர்ஷவர்தன் குல்கர்னி
தயாரிப்பாளர் : கிர்தி நக்வா, ரோகித் செளகனி, கேத்தன் மாரு, விகாஸ் பால், விக்கிரமாதித்யா மோட்வானே, அனுராக் காஷ்யப்
அடல்ட் காமெடி படமான ஹன்டர், செக்ஸீக்கு அடிமையானவனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படம் நல்லா இருக்கா? இல்லையா என்பது இனி காண்போம்...
மண்டார் பொன்ஷே ( குல்ஷான் தேவைய்யா), தனது வருங்கால மனைவியான தி்ருப்தி (ராதிகா ஆப்தே) உடன் பேசுவதாக, படம் துவங்குகிறது. உடனே அங்கிருந்து பிளாஷ்பேக் துவங்குகிறது. பிளாஷ்பேக்கின் முடிவில், படம் மீண்டும் இணைகிறது. மண்டாரின் நண்பர்கள் அனைவருக்கும் விரைவில் திருமணம் ஆகிவிடுகிறது. ஆனால், மண்டாருக்கு, 3 வித காரணங்களால் திருமணம் தொடர்ந்து தடைபட்டு வருகிறது. மண்டாருக்கு, திருமணம் என்றால் முதலில் பயம். காதல் என்ற விஷயத்தில், மண்டாருக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. திருமணம் செய்தால், மகிழ்ச்சி எல்லாம் காணாமல்போய் விடும் என்பதில் நம்பிக்கை உடையவர். பள்ளிப்பருவத்தில், வகுப்புகளை கட் அடித்துவிட்டு, ஆபாச படங்களை பார்ப்பதில், மண்டார் ஆர்வம் கொண்டிருந்தார். செக்ஸ் சுகத்திற்கு பெண் கட்டாயம் தேவை என்பதை, மண்டார் பின் உணர்கிறார். இந்நிலையில், ஜோஸ்ட்னா ( சாய் தம்ஹான்கர்) மற்றும் பாருல் ( வீரா சக்சேனா) தம்பதிகளாக இருந்தனர். இதில், ஜோஸ்ட்னா மீது மண்டார் காதல் வயப்படுகிறார். இந்நிலையில், திருப்திக்கும், மண்டாருக்கும் இடையே நிச்சயதார்த்தம் ஏற்படுகிறது. பின் கிளைமாக்சில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதே படத்தின் மீதிக்கதை...
இயக்குநர் ஹர்ஷவர்தன், ஏன் இந்த மாதிரி படத்தை இயக்க முடிவு பண்ணினார் என்பது தெரியவில்லை. படத்தில், பெண்களின் வெள்ளைத் தோலுக்கு காட்டிய முன்னுரிமையை, அவர் படத்தின் வேறெந்த காட்சிக்கும் காட்டியதில்லை. படத்தின் கதை சிறந்ததாக இருக்கும்போதிலும், திரைக்கதை தரமற்றதாக இல்லாததால், படம் பார்ப்பவர்களுக்கு எரிச்சலே மிஞ்சுகிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலை, எடிட்டில் குறிப்பிடும்படியாக இல்லை.
குல்ஷான் தேவைய்யா, ராதிகா ஆப்தே உள்ளிட்டோரின் நடிப்பு சிறந்தவகையில் உள்ளது
சந்தோஷ மனதுடன் இருந்தால், படத்தை ஒருமுறை பார்க்கலாம்
ரேட்டிங் 2.5/5