Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2

தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2,The Amazing Spiderman 2
 • தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2
 • நடிகர்: ஆண்ட்ரூ கார்பீல்டு
 • நடிகை:எம்மா ஸ்டோன்
 • இயக்குனர்: மார்க் வெப்
07 மே, 2014 - 17:43 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2

நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...


வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்


அவரது பிளாக் முகவரி : www.adrasaka.comகாதலியோட கடலை போட்டுட்டு இருக்கும்போது, பார்ட்டியில் இருக்கும்போது, ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது திடீர் திடீர்னு ஏதோ ஒரு ஆபத்து யாருக்காவது வந்துடுவதால் அவர்களை காப்பாற்ற ஸ்பைடர் மேன் போக வேண்டிய கட்டாய சூழல் வந்துடுது. பொண்ணுங்க சைக்காலஜி என்னான்னா தன் கூட இருக்கும்போது தன்னை விட வேறு யாருக்கும் தன் இணை முக்கியத்துவம் கொடுத்தாலும் அதை தாங்கிக்கவே முடியாது. அது பெற்ற அம்மாவா இருந்தாலும் சரி, ஆபீஸ் வேலையாக இருந்தாலும் சரி. இதனால் 2 பேருக்கும் கருத்து வேறுபாடு வந்து பிரேக்கப் பண்ணிக்குறாங்க.


இந்தத்திரைக்கதையில் 2 வில்லன்கள். பொதுவாக எதிரிங்க வெளில வர மாட்டாங்க, கூடவே இருப்பவன் தான் கழுத்தறுப்பான் என்ற தியரிப்படி ஸ்பைடர்மேனுக்கு அறிமுகமான 2 பேர் அவருக்கு எதிரா திரும்பறாங்க. ஒரு வில்லன் எலக்ட்ரிக்கல் டிவிசன்ல ஒர்க் பண்றான். அவனோட சூப்பர் வைசர் எப்பப்பாரு அவனை நக்கல் அடிச்சுக்கிட்டே வர்றான். இவன் ஒரு டைம் ஒரு மின் விபத்துல மின்சாரம் பாய்ஞ்சு இரும்புக்கை மாயாவி மாதிரி அசுர சக்தி கிடைக்கப்பெறுகிறான். இன்னொரு வில்லன் ஸ்பைடர்மேனோட சின்ன வயசு நண்பன், கிளாஸ்மேட். இவனுக்கு ஒரு வினோதமான நோய் தாக்குது. அதுக்கு ஸ்பைடர்மேனோட அப்பா செஞ்ச ஆராய்ச்சியாலதான் இப்படி ஆச்சுன்னு நம்பறான்.


இந்த 2 வில்லன்களும் ஹீரோவுக்கு என்ன பிரச்னை பண்றாங்க? அதை ஹீரோ எப்படி ஜெயிக்கறார் என்பதே கதை. இந்த ஆக்சன் கதை கூடவே நெஞ்சை மயக்கும் காதல் கதையும் உண்டு. காதல் கதை என்றாலே நெஞ்சை மயக்கும், தானே?


ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் நிஜ வாழ்விலும் லவ்வர்ஸ். ஸ்பைடர் மேன், பீட்டர் பார்க்கர் அப்டினு 2 கேரக்டரில் ஆண்ட்ரு பிரமாதமா பண்ணி இருக்கார். பொண்ணுங்களுக்குப்பிடிச்ச மாதிரி சைல்டிஷ் ஃபேஸ், அவர் ஸ்பைடர்மேன் டிரஸ் போட்டாலே தியேட்டர்ல விசில் பறக்குது. சுடச்சுட 3 கிஸ் சீன்ஸ் உண்டு.


ஹீரோயின் எம்மா ஸ்டோன் அய்யோ அம்மா, என்னா கலர்? தேங்காய் பர்பியை ரோஸ்மில்கல நனைச்சு ஜிகிர்தண்டாவுல போட்டு சாப்பிட்டா எப்படி இருக்கும்? அப்டி ஒரு காக்டெய்ல் கலக்கல், கலர் குல்பி ஐஸ். சாதாரணமாகவே மின்னல் மாதிரி ஒளிரும் இவர் கண்கள் காதலனைக்கண்டதும், ஓவர் ஆக்டிங்கில் கண்களை விரிய வைக்கும்போது சொக்க வைக்கிறார்.


தாழ்வு மனப்பான்மையில் தவிக்கும் எலக்ட்ரீசியன் கெட்டப், நடிப்பு எல்லாம் அபாரம். அவர் வில்லன் ஆன பின் தோரணை, கெத்து பத்தலை. இன்னொரு வில்லன் சின்ன வயசு நண்பன் கேரக்டர் பால் வடியும் முகமாக இருப்பதால் பெரிதாக பயமோ, ஹீரோவுக்கு ஏதாவது ஆகிடுமோ என்ற பரிதவிப்போ ஏற்படலை, இது திரைக்கதையில் பெரிய சறுக்கல்


சி.பி.கமெண்ட் : தி அமேஸிங் ஸ்பைடர் மேன் - 2, முதல் பாகத்தை விட சற்று நன்றாக இருக்கிறது. அதிரடி மற்றும் கம்யூட்டர் கிராபிக்ஸ் பிரமாதம், ஹீரோயினும் கூட...வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in