Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

உன் சமையலறையில்

உன் சமையலறையில்,Un Samayalaraiyil
 • உன் சமையலறையில்
 • பிரகாஷ் ராஜ்
 • பிற நடிகர்கள்: தேஜஸ், தம்பி ராமைய்யா
 • சினேகா
 • பிற நடிகைகள்: சம்யுக்தா ஹர்னாட்
 • இயக்குனர்: பிரகாஷ்ராஜ்
09 ஜூன், 2014 - 22:38 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » உன் சமையலறையில்

தினமலர் விமர்சனம்


‛மொழி, ‛அபியும் நானும் , ‛அழகிய தீயே, ‛தோனி உள்ளிட்ட வித்தியாசமும், விறுவிறுப்புமான திரைப்படங்களை தயாரித்து தந்த பிரகாஷ்ராஜின் தயாரிப்பில், வெளிவந்திருக்கும் மற்றுமொரு மாற்று சினிமா தான் ‛உன் சமையலறையில்... இப்படத்தை தயாரித்திருப்பதுடன் ‛தோனி படத்தை இயக்கி, நடித்தது மாதிரி ‛உன் சமையலறையில் படத்தை பிரகாஷ்ராஜே புதியகோணத்தில் இயக்கி, நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு இளையராஜாவின் இசை மேலும் பலம் சேர்த்திருப்பது ‛பலே சொல்ல வைக்கிறது.

கதைப்படி... தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரியான பிரகாஷ்ராஜூக்கு கல்யாண ஆசை இல்லை. செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடையில் இருக்கும் சினிமா டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சினேகா பண்ணும் ஒரு மிஸ்டு போன்கால், ருசியான சாப்பாட்டு பிரியர்களான இருவரையும் ஒருமாதிரி காதலில் தள்ளுகிறது. ஆனால் ஒருத்தருக்கு ஒருத்தர் முகம் தெரியாத சினேகா - பிரகாஷ்ராஜ் ஆரம்ப காதலை சேர்த்து வைக்கபோன இருவர், ஜோடி சேர ஆசைப்பட்டதால் இவர்களது காதல் திக்கு தெரியாத திசைக்கு போகிறது. இறுதியில் தூதர்களின் காதல் இவர்களால் இனங்காணப்பட்டு, அவர்களது காதலும், இவர்களது காதலும் கசிந்து உருகியதா? இல்லையா? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடனும், விதவிதமான உணவு பதார்த்தங்களுடனும் சொல்லியிருக்கும் ‛பளிச் படம் தான் ‛உன் சமையலறையில் மொத்தப்படமும்!

வயது கடந்து வரும் காதல், வாய்க்கு பிடித்த சமையல், தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரி மிடுக்கு, என தன் பாத்திரத்தை பார்த்து பார்த்து செதுக்கி பலே சொல்ல வைத்து விடுகிறார் பிரகாஷ்ராஜ்.

சினேகாவும் முதிர்கன்னியாக, கண்ணீரும், காதலுமாக உருக வைக்கிறார்.

இவர்கள் இருவரையும் காட்டிலும் தேஜஸ், சம்யுக்தாவின் காதலில் இளமை ஊஞ்சலாடுகிறது. தம்பி ராமைய்யா, குமரவேல் உள்ளிட்டோரும் பளிச்!

இளையராஜாவின் இசை, பெண் ஒளிப்பதிவாளர் ப்ரீதாவின் ஒளிப்பதிவு நச்!

முகம் பார்க்காத ஆள்மாறாட்ட காதல், தமிழ்சினிமாவுக்கு புதுதில்லை... என்றாலும், அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் களம், வாய்க்கு ருசியான சமையல் என்பதில் தனித்து நிற்கிறார் இயக்குநர் பிரகாஷ்ராஜ். பேஷ்... பேஷ்...!

ஆதிவாசி ஒருவருக்கு, தன் வீட்டில் பிரகாஷ்ராஜ் அடைக்கலம் தருவது... அந்த ஆதிவாசியின் பின்னணியில் நடக்கும் சதிகளை தெளிவாக இயக்குநர் பிரகாஷ்ராஜ் சொல்ல துணியாதது உள்ளிட்ட ஒருசில குறைகள் இருந்தாலும்... ‛உன் சமையலறையில் - ‛வாசம் - நேசம்!----------------------------------------------------------------------


நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...


வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்


அவரது பிளாக் முகவரி : www.adrasaka.comஎண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய தெலுங்கு நாவலை மையப்படுத்தி மலையாளத்தில், சால்ட் அண்ட் பெப்பர்னு சண்டக்கோழி வில்லன் நடிகர் லாலை வைத்து சூப்பர் ஹிட் கொடுத்தாங்க. அதை நம்ம தமிழில் ரீமேக் செய்து இயக்கி இருப்பது ஆரோக்யமான தமிழ் சினிமா விரும்பி பிரகாஷ்ராஜ். இது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகி இருக்குனு பார்ப்போம்.


ஹீரோ ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்ல அதாவது தொல்பொருள் துறை அதிகாரி. 45 வயசாகியும் மேரேஜ் ஆகலை. பொண்ணு எதுவும் செட் ஆகலை. 25 வயசுப்பையனுக்கே பொண்ணுங்க செட் ஆவது கடினம். 45 க்கு எப்படி ஆகும்?


ஒரு ராங்க் கால்ல ஹீரோயின் அறிமுகம் கிடைக்குது. போன்லயே கடலை போடுறாங்க. இரண்டு பேரும் நேர்ல மீட் பண்ண பிளான். ஆனா தயக்கம். நேர்ல பார்க்கும்போது பிடிக்காம போய்ட்டா? அதனால 2 பேருமே அவங்களே சந்திச்சுக்காம அவங்க சார்பா ஒரு ஆளை அனுப்பறாங்க. அவங்க 2 பேருக்கும் பத்திக்குது. 2 பேரும் அவங்கவங்க எஜமான் கிட்டே வந்து உங்க ஆள் சரியில்லை கட் பண்ணிடுங்கனு சொல்லிட்டு இவங்க காதலை டெவலப் பண்ணிட்டு இருக்காங்க . ஒரிஜினல் லவ் ஜோடி எப்படி சேர்றாங்க என்பது தான் கதை


இந்தப்படத்தின் ஹீரோ இசைஞானி இளையராஜா தான் என்று கண்ணை மூடிக்கிட்டு காதைத்திறந்து வெச்சுக்கிட்டு சொல்லிடலாம். என்ன ஒரு இசை. நல்ல இசை சாதாரண படத்தை அசாதாரண படமாகவும், நல்ல ப்டத்தை பிரமாதமான படமாகவும் மாற்ற வல்லவை. அந்த வகையில் திரைக்கதையில் பல லாஜிக் மிஸ்டேக்ஸ் இருந்தாலும் தன் இசையால் அதை எல்லாம் மறைத்து மறக்கடிக்கிறார் ராஜா.


ஹீரோவாக பிரகாஷ் ராஜ். தமிழ் சினிமாவில், 2 வில்லன்கள் மறக்க முடியாதவர்கள், 1 ரகுவரன், 2 பிரகாஷ் ராஜ். இவர் புத்திசாலித்தனமாக கேரக்டர் ரோலும் பண்ணி ஹீரோவாகவும் தன்னை தக்க வைக்கிறார். விடுகதை படத்தில் இவர் ஆல்ரெடி செஞ்ச ரோல் தான் இதுவும் என்றாலும் மனிதர் குறை சொல்ல முடியாத நடிப்பை தந்திருக்கிறார் .


ஹீரோயினாக சினேகா. மேரேஜ்க்குப்பின் இவர் அழகு நேரில் 25 சதவீதம் கூடியும், திரையில் 50 சதவீதம் குறைந்திருப்பதும் ஏனோ? அவர் உடலில் மாபெரும் சோர்வு. பிரசன்னா கவனம். முகத்தில் கூட புன்னகை ஒரு மாற்று உற்சாகம் குறைவாகவே தெரிகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் சபாஷ் போட வைக்கிறார்.


இன்னொரு ஹீரோவாக புதுமுகம் தேஜஸ். முகத்தில் நல்ல தேஜஸ். எதிர் காலம் உண்டு. நடிப்பில் பாஸ் மார்க். இன்னொரு ஹீரோயின் சம்யுக்தா ஹர்னாட். மிக மெல்லிய புருவங்கள். மிக ஒல்லிய உதடுகள் என தமிழனின் மனசை அள்ளியவர் பட்டத்தை எட்டிப்பிடிக்க முயலாதவராகவே இருக்கிறார். காதல் காட்சிகளில் முகபாவம் கனகச்சிதம்.


தம்பி ராமைய்யா சமையல் கலைஞனாக கலக்குகிறார். செண்ட்டிமெண்ட் காட்சி இவருக்கு நல்லா வருது. ஆனா பல படங்களில் மொக்கை காமெடி தனக்கு நல்லா வருது என நினைத்து இவர் பர்ஃபார்மென்ஸ் செய்வது ஏனோ ?


உன் சமையலறையில் - ஆள் மாறாட்டக்காதல் கதை - கண்ணியம் - இளையராஜாவின் இசை + லாஜிக் மிஸ்டேக்ஸ் ஏராளம்.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in