Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

ஆர்யா சூர்யா

ஆர்யா சூர்யா,Arya Surya
  • ஆர்யா சூர்யா
  • டாக்டர்.ஸ்ரீனிவாசன்
  • ..
  • இயக்குனர்: இராம.நாராயணன்
09 செப், 2013 - 15:46 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஆர்யா சூர்யா

 நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


சினிமாவுல சேர்ந்து  கானா பாட்டு எழுதனும்னு  ஒருத்தரும்,  சினிமாவுல நடிக்கனும்னு ஒருத்தரும் சொந்த ஊர்ல இருந்து கிளம்பி சென்னை வர்றாங்க. எதேச்சையாக  2 பேரும் சந்திச்சுக்கறாங்க. வைரக்கடத்தல் கும்பல் ஒண்ணு கிட்டே மாட்டிக்கறாங்க. கடத்தல்  கும்பல் தலைவன், பல  கோடி மதிப்புள்ள வைரங்களை முன் பின் அறிமுகம் இல்லா  இந்த  2 பேர்  மூலம் கடத்த பார்க்கறான். இவங்க போலீஸ்ல அவங்களை பிடிச்சுக்கொடுத்துடறாங்க. இடைவேளை.

இன்னொரு டிராக். புருஷன்  மேல சந்தேகப்படும் ஒரு லேடி. எப்போ பாரு அவங்க கனவில் தன் புருஷன் யாரோ ஒரு லேடி  கூட கபடி கபடி விளையாடுற மாதிரி  கனவு கண்டு அலர்றவங்க. கனவில் கண்ட ஒரு லேடி அவங்க பங்களாவுக்கு வேலை கேட்டு வருது. அந்த லேடியை பங்களா ஓனர் பொண்ணுன்னு  நினைச்சு அந்த  2 லூஸ்கள்ல  ஒரு ஹீரோ லவ்வறாரு. இன்னொரு டிராக்ல புருஷனை கொஞ்சம்  கூட மதிக்காத  ஒருலேடி. அவங்களுக்கு ஒரு பொண்ணு. அந்த பொண்ணை இன்னொரு ஹீரோ லவ்வறாரு.

இந்த 2 ஹீரோவையும்  பழி வாங்க அவங்க 2 பேரும்  லவ் பண்ணும் பொண்ணுங்களை கடத்த அந்த வைரக்கடத்தல்  தலைவன் திட்டம் போட்டு  பொண்ணுங்களுக்குப் பதிலா பொண்ணோட  அம்மாவை  கடத்திட்டு வந்துடறாங்க. 2 ஹீரோக்களும் போய் அவங்களை மீட்பது  தான் க்ளைமாக்ஸ்

சி.செண்டர் ரசிகர்களை குறிவெச்சு ராமநாராயணன் படம் எடுப்பது நமக்கெல்லாம் தெரிந்ததே. அதுக்காக கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாம இப்படி சொதப்பக்கூடாது. ஆனாலும்  மக்கள் சிரிக்கறாங்க. டைம் பாஸ் ஆகுது. மொத்தப்படமே 2 மணி நேரம் தான்.

டாக்டர் சீனிவாசன் தான் ஹீரோ. இவரிடம் கைவசம் உள்ளது ரெண்டே 2 முகபாவனைகள் தான் போல அதைவெச்சே முழு படத்தையும் சமாளிக்கறாரு. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் வரும் டயலாக்கையே ரிப்பீட்டா பேசி லட்டுல இருந்து சுட்டுட்டோமில்ல? அப்டினு சமாளிக்கறாரு. புதுசா காமெடி  ட்ரை பண்ணா தேவலை. இவருக்கு  ஒரு ஓப்பனிங்க் சாங்க், ஒரு டூயட் உண்டு. வாழ்வுதான். பாடல் காட்சிகளில், இவர் மற்ற ஹீரோக்களை கலாய்த்தே ஸ்டெப் போடுவதால் சிரிக்க முடிகிறது .

விஷ்ணுப்ரியன் இன்னொரு ஹீரோ. இவர் ஏன் படம்  பூரா  தாடியோடதிரியறார்னு தெரியலை. சோக கேரக்டர், தீவிரவாதி  , வாழ்வில் விரக்தி அடைந்த கேரக்டர் என்றால்   தாடி ஓக்கே. காமெடி  மொக்கை படத்துக்கு  எதுக்கு  தாடி கெட்டப்? வந்த வரை  ஓக்கே

கங்கை அமரன், சித்ரா லட்சுமணன்  2 பேரும்  2 ஹீரோயின்களுக்கு தனித்தனி அப்பாவா நடிச்சிருக்காங்க. 2 பேர்ல சித்ரா லட்சுமனன் தேவலை. கங்கை அமரனுக்கு ஜொள்விடும் கேரக்டர். இதுதான் சாக்குன்னு ஓவரா வழிஞ்சிருக்கார்.

நளினி, கோவை சரளா  2  பேரும்  ஹீரோயின்களுக்கு அம்மாக்கள். நளினி செஞ்ச காமெடி அளவுக்குக்கூட கோவை சரளா காமெடி பண்னலை.அவரோட பாடி லேங்குவேஜ்ல தான் ஒரு டிவி ஆர்ட்டிஸ்ட் அப்டிங்கற தெனாவெட்டு  தெரியுது. காமெடி ஆர்ட்டிஸ்ட்னு ஆல்ரெடி பேர் எடுத்ததால அட்டும் அப்ளாஸ்  கிடைச்சுடாது . கொஞ்சமாச்சும் காமெடி பண்ணாத்தான்  சிரிப்பு  வரும் .

டி.ராஜேந்தர் கலக்கலா ஒரு குத்தாட்டம் போடறார். அவர் வரும் ஒரே ஒரு காட்சியில் ஆரம்பகால விஜய் படங்களில் போடுவாங்களே. “ இந்தப்பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்“னு அப்டி டைட்டில் போடறாங்க,. செம காமெடி  ஆனா  சும்மா சொல்லக்கூடாது , டி ஆர்  இந்த வயசுலயும்  கொஞ்சம்  கூட கூச்சப்படாம  கவர்ச்சி நடிகை ரெஞ்சுக்கு இறங்கி வந்து செம ஆட்டம்  போட்டிருக்கார். எனக்கு என்ன கவலைன்னா  இந்தப்பாட்டு, டான்ஸ்  ஹிட் ஆகி   டி.ஆர்  அனுராதா, டிஸ்கோ சாந்தி மாதிரி ஒருபாட்டுக்கு ஆடிப்போகும் குத்தாட்ட நடிகராகிடக்கூடாதேன்னுதான். 

வெண்ணிற ஆடை  மூர்த்தியின் வழக்கமான சேஷ்டைகளும், டபுள்  மீனிங்க் வசனங்களும் உண்டு. 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
 

1.  டாக்டர் சீனிவாசன் மார்க்கெட் வேல்யூ  புரிந்து  படம் முழுக்க அவரை சுற்றியே கதை நகரும்படி பார்த்துக்கொண்டது (அப்போ கதை இருக்கா? என யாரும் ஜெர்க் ஆகவேண்டாம்)

2. டி.ராஜெந்தரை ஒரு பாட்டுக்கு ஆட வைத்து, பாட வைத்து அவரை போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்தியது.

3. மொக்கைக்கதை, லாஜிக் இல்லாத  திரைக்கதை என்றாலும் சி.சென்டர் ஆடியன்சை சிரிக்க வைக்க  முயற்சி செய்தது.


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. எஸ்.வி.சேகரின் 1000 உதை வாங்கியாபூர்வ சிகாமணி, கிரேசி மோகனின் கிரேசி தீவ்ஸின் பாலவாக்கம் ஆகிய நாடகங்களில் இருந்து 13டயலாக்குகளை (மொக்கை ஜோக்ஸ்) அப்பட்டமா சுட்டு இருக்கீங்களே? அவங்க கேட்க மாட்டாங்களா? இது போக  எஸ்.வி.சேகர் நடிச்ச கதாநாயகன் பட வசனங்களும் சுடப்பட்டிருக்கு.

2. சீனிவாசன் பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்கார். அப்போ கிராஃபிக்ஸ் பாம்பு பங்களாவுக்குள்ளே வருது. இவர்தான் பாத்ரூம் கதவை தாழ் போட்டு குளிக்கறாரே? எப்படி உள்ளே வருது? அதேபோல்  ஹீரோயின்  அப்போ கரெக்டா பாத்ரூம்க்குள்ளே வருவதும் அலறுவதும்  ரஜினியின் பாண்டியன்  காலத்து  காமெடி. பல படங்கள்ல இந்த காட்சியை பார்த்தாச்சு. முடியல.

3. லேடீஸை கடத்தறவங்க சாக்கு மூட்டைல வெச்சு கடத்திட்டு வருவது எல்லாம் அந்தக்கால காமெடி. கொஞ்சமாச்சும் புதுசா சிந்திக்கமாட்டீங்களா?

4. டி.ஆர்.சம்பந்தமில்லாம அவர் பாட்டுக்கு வர்றாரு ஆடிட்டு போறாரு. அந்த சீனை கதையோட லிங்க் பண்ண வேணாமா?   

5. ஆம்பளைங்க 2 பேரு வீடு பார்க்க வருவதும், அவங்களை பெண் பார்க்க வந்த மாப்ளைங்கன்னு நினைச்சு இவங்கபேசுவதும், அந்த உரையாடல் டபுள்  மீனிங்க்ல வருவதும் இன்னுமெத்தனை படங்கள்ல பார்க்க வேண்டி வரும்? டயலாக்கை  கூட புதுசா யோசிக்க மாட்டீங்களா? காட்சிகளைத்தான் சுட்டுடறீங்க, வசனமுமா?


மனம் கவர்ந்த வசனங்கள் (டிராமாவில் சுட்ட வசனங்கள் போக மீதி)


1. என்னது? உங்க 3 பேர் பேரும் ராகினி, ரோகினி , வாகினி யா?  எல்லாம் தியேட்டர் பேரா  இருக்கு ? கில்மா லேடீஸ் - டிக்கெட் எடுத்தா படம் பார்க்கலாம்
வீட்ல  ஒரு பழைய படம்  இருக்கு அதை எல்லாம் நான் பார்க்கறதே  இல்லை. ஒன்லி  புதுப்படம் தான். ஹிஹி

2. என்னது? போஸ்டர்ல மலையாள பிட் படம் ஒட்டிட்டு  உள்ளே பாதாள பைரவி  ஓட்டிட்டு இருக்கற மாதிரி சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருக்கீங்க ?

3. ஒத்தைப்பொண்ணுன்னு தானே நம்ம பொண்ணு மேல நீ உசுரா இருகே? நானும்  உனக்கு  ஒத்தப்புருஷன்  தானே?  என் மேல மட்டும் ஏன்  காண்டா   இருக்கே?

4. உங்க பேரு சொக்க நாதன். அதை சுருக்கி சொக்கு சொக்குன்னு கூப்பிடறேன். தப்பா? எனக்கு சுருக்குனாத்தான் பிடிக்கும் உன் பேரு சந்திரா , அதுக்காக நான் உன்னை சந்து சந்துன்னுகூப்பிடமுடியுமா?

5. வேலைக்காரி குளிக்கும்போது எதுக்கு எட்டிப்பார்த்தீங்க? அவ சுத்த பத்தமா குளிக்கறாளா?ன்னு செக் பண்ணேன் (பாக்யா வார இதழில் 1999 பொங்கல் மலரில் வந்த அரதப்பழசான  ஜோக்  இது - எழுதியது சி பி செந்தில்குமார் சென்னிமலை)

6. அங்கே 2 பேர்  இருக்காங்க, யாரு மாப்ளை? அட சூப்பர் மாப்ளை, சூப்பர் மாப்ளை

7. நல்ல வேளை நம்ம பொண்ணுக்கு சமைக்கத்தெரியாது உங்க குடும்பத்துக்கே அது தெரியாதே, சமைஞ்சீங்க, அதோட சரி

8.  நான் சொன்னது எதையும் மறக்கலையே? நீ  என்ன  திருக்குறள் பாடமா நடத்துனே? மறக்க?

9. பொம்பளைங்க புருஷனைத்தவிர  எல்லாத்தையும்  பேரம் பேசித்தான் வாங்குவாங்க, ஆம்பளைங்க  ஹார்லிக்ஸ் விளம்பரம் மாதிரி அப்படியே வாங்குவாங்க

10. எல்லாருக்கும்  வயசாச்சுன்னா  முட்டி பிராப்ளம், என் புருஷனுக்கு குட்டி பிராப்ளம். குட்டிங்க பின்னாலயே சுத்துவாரு

11.  என்  புருஷன்  போற  ரூட்டை  நீ கண்காணிக்கனும். அவர் எங்கே போறாரு? என்ன செய்றார்? என்ன செய்ய முடியலை? இதை  எல்லாம் நீ வேவு பார்க்கணும். கிட்டத்தட்ட விளக்கு பிடிக்கும் வேலை? அதென்ன கிட்டத்தட்ட? அதே தான்.

12  ரொம்ப ஸ்மூத்தா ட்ரைவ் பண்றீங்களே? நான் ஆள்  தான் ரப் டைப் ஆனா செம சாஃப்ட்

13,.  என்ன தான் கோழிக்கு வெரைட்டியா  தீனி போட்டாலும்  அது  முட்டை தான் போடும்.

14.  பாம்  வெச்சதெல்லாம்  அந்தக்காலம் அதுக்காக ஏவுகணையா விட முடியும் ?

15.  ஆட்டோ சார்ஜ் எவ்ளவு? டூ ஃபிஃப்டி சார் யூ மீன்  100? அய்யோ 250

16. பொண்ணை தூக்கிட்டு வரச்சொன்னா அம்மாவைத்தூக்கிட்டு வந்திருக்கீங்க? சாரி பாஸ், இருட்டுல 2 பேருக்கும்  வித்தியாசம்  தெரியல.

சி.பி.கமெண்ட் -   சி சென்டரில் ஓடிடும். போட்ட முதலீட்டை 2 மடங்கு லாபத்தோட எடுத்துடுவாங்க. ஆனா நாம இதை டிவில பார்க்கற அளவுகூட ஒர்த் இல்லை.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in