நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி |
டென்ட் கொட்டாய்களுக்கு சென்று வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த காலம் முதல் இன்று வரை சினிமா ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. வளர்ந்து வரும் டெக்னாலஜிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தற்போது சினிமா துறையும், அவர்கள் இருக்கும் இடத்திற்கே தற்போது சினிமாக்களை கொண்டு சேர்க்க பலவித முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வரிசையில் சினிமா ரசிகர்கள் வீட்டில் இருந்து, தங்களுக்கு பிடித்த சினிமாக்களை பார்ப்பதற்கு உருவானவை தான் ஓடிடி தளங்கள். ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம், ஜீ5, ஆஹா, சோனி லைவ், லயன்கேட்ஸ் பிளே என ஓடிடி தளங்களும் தியேட்டர்களை போல் வரிசைக்கட்டி நிற்கிறது. இந்நிலையில், இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
குபேரா
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா நடிப்பில் ஜூன் 20ஆம் தேதி வெளியான திரைப்படம் குபேரா. பான் இந்தியா படமாக உருவாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. பிச்சைக்காரராக இருக்கும் தனுஷ், ஆபத்தில் சிக்கி எப்படி வெளியில் வருகிறார் என்பதை மையமாக வைத்துக் கதை உருவாக்கப்பட்டிருக்கும். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த திரைப்படம் நாளை (ஜூலை18) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.
சட்டமும் நீதியும்
இயக்குநர் சசிகலா பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சரவணன் நடிப்பில் உருவான வெப் சீரிஸ் தான் 'சட்டமும் நீதியும்'. குற்ற வழக்கு மற்றும் அதைச் சுற்றி நடக்கும் நீதிமன்ற விசாரணை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட த்ரில்லர் கதைக்களமாகும். இந்த வெப் சீரிஸ் நாளை(ஜூலை18) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
படைத் தலைவன்
இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'படைத்தலைவன்'. யானையை மையமாக வைத்த உருவான இந்த திரைப்படத்தில் பிரச்னையில் சிக்கும் யானையை மீட்டாரா?, இல்லையா என்பதே கதைச் சுருக்கமாகும். இந்த திரைப்படம் நாளை (ஜூலை18) டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அஸ்தரா(Asthra)
மலையாள இயக்குநர் ஆசாத் அலவில் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் அஸ்தரா(Asthra). ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகிறது. கடத்தல்காரர்கள் போலீஸ்காரர்களை கடத்தி சித்ரவதை செய்கின்றனர். அவர்கள் வழக்கை விசாரிக்கும் அதிகாரி மீட்டாரா?, இல்லையா என்பதேக் கதைக்களமாகும். இந்த திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை(ஜூலை18) வெளியாகிறது.
மனிதர்கள்
புதுமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மனிதர்கள்'. இரவில் சிக்கிக் கொள்ளும் ஐந்து நண்பர்கள் சந்திக்கும் பிரச்னையை த்ரில்லருடன் சொல்லி இருக்கும் திரைப்படமாகும். இப்படம் கடந்த 17ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்திலும், நாளை(ஜூலை18) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.
டிஎன்ஏ
நடிகர் ஆதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ. த்ரில்லர் கதையாக உருவாகி இருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் ஜூலை 19ம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.