இயக்குனர் பாலாஜி சக்திவேலின் "நல்லூர்" பட அறிமுகம் அகில், இன்னும் படிக்க வேண்டியது நிறைய ிருக்கிறது...என்பதை சொல்லும் விதமாக வெளிவந்திருக்கும் படம் தான் "ரெட்ட வாலு".
கதாநாயகி சரண்யா நாக்கும் பாலாஜி சக்திவேலின் காதல் பட அறிமுகம் தான் (காதலில் நாயகி சந்தியாவின் தோழியாக வருவாரே...அவரே தான்).திரையுலகில் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டதின் மூலம் நிரூபித்திருக்கிறார்.
செய்யாத குற்றத்துக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்படும் அகில், அங்கிரந்து வெளிவந்ததும் சொந்த ஊருக்கு போகாமல், நொந்து கிடக்கும் ஜோமல்லூரிக்கு உதவி, அவருடன் வேறு ஊரில் செட்டில் ஆகிறார். அந்த ஊரில் தனக்கு அடைக்கலம் தரும் ஜோமல்லூரியின் விரோதி தம்பி ராமையாவின் மகள் சரண்யாநாக்கிற்கு அகில் மீது காதல் பிறக்கிறது. அகில் தான், திருடன் என்னும் குற்ற உணர்வால் சரண்யாவின் காதலை ஏற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் அம்மணியின் கசிந்துருகும் காதல் அகிலை கரைக்க, சாக்கு போக்கு சொல்ல முடியாமல் காதலை ஏற்கிறார். அப்போது அகிலைத் தேடி போலீஸ் வர, தப்பித்தோம், பிழைத்தோம் என எஸ்கேப் ஆகும் அகில், மீண்டு(ம்) வந்து காதலியை கைபிடித்தாரா? கையில் விலங்குடன் சிறை சென்றாரா? என்பது க்ளைமாக்ஸ் !
அகில், சரண்யா நாக், தம்பி ராமையா, ஜோமல்லூரி, கோவை சரளா, சோனா எல்லோரும் இயக்குநர் எதிர்பார்த்ததற்கும் மேலாக நடித்து ரசிகர்களை சோர்வடைய செய்திருக்கின்றனர்.
செல்வகணேஷின் இசையில் பாடல்கள் பழைய ர(ரா)கம் ! சிட்டி பாபுவின் ஒளிப்பதிவு இந்த வில்லேஜ் கதைக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் புதியவர் தேசிகாவின் இயக்கத்தில் கொடுமையை எல்லாம் கண்டுசகிக்க ரசிகர்கள் உங்களுக்கு கொடுப்பினை இருக்காது ! காரணம் படம் ரிலீஸ் ஆன நாள் தொட்டு சென்னையில் தினசரிகளில் இப்பட விளம்பரங்களில் வந்த திரையரங்கிற்கு எல்லாம் சென்று ரெட்டவாலு க்கு ஒற்றை டிக்கெட் என்பது கேட்டால், நம்மை ஏறஇறங்க பார்த்தவர்கள்...அப்படி ஒரு படமே இங்க ஓடலை...என்றனர் அவர்களிடம்...இதோ போஸ்டர் ஒட்டியிருக்கிறதே...என்றதும் பார்த்துட்டு (போஸ்டரை..) போங்க ! என்று நக்கலடித்ததும் அரண்மனை மாதிரி ஹவுஸ்..! புல் லாக ஓடும் திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆன நாள் முதலே ஓடாத ரெட்ட வாலு மாதிரி தமிழ் சினிமாவில் ஒட்ட நறுக்க வேண்டிய திரைப்படங்களும் போஸ்டரில் மட்டும் ஓடுகின்றன !
"மொத்தத்தில் ரெட்டவாலு மாதிரி படங்களை ஒட்ட நறுக்கணும் !"