டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த கர்நாடகா அரசு | சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறிய ஐஸ்வர்ய லட்சுமி | பிரச்சனை முடிந்து திரைக்கு வந்தது 'தணல்' | ‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? |
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மெய்க்காப்பாளரான ஜிதேந்திர ஷிண்டே என்பவர் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பாதித்ததாக ஒரு புகார் எழுந்துள்ளது. அதோடு 5 வருடங்களுக்கு பிறகு ஒரு பிரபலத்திற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்ட நபர் பாடிகார்டாக இருக்கக்கூடாது என்கிற விதி இருந்தபோதும், இந்த ஜிதேந்திர ஷிண்டே அமிதாப்பச்சனிடம் ஆறு ஆண்டுகளாக இருந்துள்ளார்.
இந்தநிலையில் ஜிதேந்திர ஷிண்டே, வருடத்துக்கு ஒன்றரை கோடி ரூபாயை அமிதாப்பச்சனிடம சம்பாதித்தாரா? இல்லை வேறு வழியில் சம்பாதித்தாரா? என்று அவரிடத்தில் மும்பை போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. இந்தவிசாரணையில், தனது மனைவி ஒரு செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன்மூலம் மும்பை பிரபலங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதால் இந்த ஒன்றரை கோடி வருமானம் கிடைத்து வருவதாகவும் விசாரணையில் அவர் கூறியிருக்கிறார்.
இந்த விசாரணைக்குப்பிறகு அமிதாப்பச்சனிடம் கடந்த 6 ஆண்டுகளாக செக்யூரிட்டியாக இருந்து வந்த ஜிதேந்திர ஷிண்டே மும்பை தெற்கு காவல் நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.