பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

த பேமிலி மேன் மற்றும் சர்ச்சைக்குரிய த பேமிலி மேன் 2 ஆகிய தொடர்களை இயக்கிய ராஜ் மற்றும் டிகே ஆகியோர் அடுத்து புதிய வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார்கள். அது த பேமிலி மேன் 3 தொடரா அல்லது புதிய தொடரா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
ஆனால், அத்தொடரில் நடிக்கும் ஷாகித் கபூர், ராஷி கண்ணா, இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே ஆகியோர் அது பற்றி அப்டேட் கொடுத்துள்ளனர்.
இடது கழுத்துப் பகுதியில் 2 டாட்டூக்களைக் காட்டும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு, “செட்டில் காத்திருக்கிறேன், சீக்கிரம் அழையுங்கள் ராஜ், டிகே. விஜய் சேதுபதியுடன் பிரேமை ஷேர் செய்து கொள்ள காத்திருக்க முடியவில்லை. சாரி, ராஷி கண்ணா, உங்களுடன் செட்டில் ஏற்கெனவே பழகிவிட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ராஷி கண்ணா, “இருக்கட்டும், விஜய் சேதுபதிக்காக மன்னித்துவிடுகிறேன். எனக்கும் அதே போன்றுதான் இருக்கிறது. ராஜ் மற்றும் டிகேவைக் கேளுங்கள்,” என பதிலளித்துள்ளார்.
இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இருவரும் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “மக்கள் செல்வன் வீட்டினுள்... ப்ப்ப்பபபா... குமுதா ஹேப்பி அண்ணாச்சி,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால், விஜய் சேதுபதி யாருக்குமே இது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.