'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படம் உருவாக்கி அதனை மொபைல் செயலியில் வெளியிட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து போலீசில் வாக்குமூலம் அளித்த பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா, இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த விஷயத்தில் முதன் முதலாக போலீசிடம் வாக்குமூலம் அளித்தது நான்தான். மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் அழைத்ததும், ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது குழந்தைகள் குறித்து தான் எனக்கு கவலை ஏற்பட்டது. இருப்பினும், எந்த வித தயக்கமும் இல்லாமல் நான் வாக்குமூலம் அளித்தேன். ஆபாச பட நிறுவனம் பற்றி கூறினேன்.
ஒருதலைப்பட்சமாக இல்லாமல், எனக்கு தெரிந்ததை தெரிவித்தேன். இந்த விவகாரத்தில் சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இது தற்போது விசாரணையில் உள்ளது. எனவே, இதுபற்றி இங்கு கூறுவது சரியானதாக இருக்காது. மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசில் தொடர்பு கொண்டு நான் கூறிய விவரங்களை அவர்களின் அனுமதியுடன் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு ஷெர்லின் சோப்ரா கூறினார்.