பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி | 55 வயதான கேஜிஎப் நடிகர் புற்றுநோயால் மரணம் | பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு |

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் என்று அறியப்பட்டாலும் இந்தியாவில் ஒரு கிராமத்திலிருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பவர் சன்னி லியோன். அவர் எங்கு சென்றாலும் அவரைக் காண அப்படி ஒரு கூட்டம் கூடும்.
கனடாவில் பிறந்தவரான சன்னி லியோன் அமெரிக்க குடியுரிமையையும் உடையவர். இந்தியாவிலும் பல மாதங்கள் தங்கியிருப்பார். தற்போதும் பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சன்னி லியோன் மும்பையில் புதிய வீட்டில் குடிபெயர்ந்துள்ளார்.
புதிய வீட்டில் தனது கணவர், குழந்தைகளுடன் புகைப்படங்களைப் பகிர்ந்து, “இந்தியாவில் எங்களது வாழ்க்கையின் புதிய அத்தியாயம் ஆரம்பம். இங்கு நாங்கள் கட்டியுள்ள புதிய வீடும், எங்களது வாழ்க்கையையும் நேசிக்கிறேன். எங்களது அழகான மூன்று குழந்தைகளால் கேக் மீதுள்ள ஐஸ் போல இருக்கிறது,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
முதல் குழந்தையைத் தத்தெடுத்த சன்னி லியோன் அதன்பின் வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளுக்குத் தாயானார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்திலும் சன்னிக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது.




