என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் தமிழில் ரஜினியுடன் இணைந்து லிங்கா படத்தில் நடித்திருந்தார். தற்போது நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தெலுங்கில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். தெலுங்கில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் நாகார்ஜூனா இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி ஹிட்டான படம் சோக்காடே சின்னி நாயனா.
இந்தநிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் துவங்கியுள்ளது. இதில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகை சோனாக்ஷி தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைக்க இருக்கிறார். இந்நிலையில் சோனாக்ஷி சின்ஹாவை சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
சிரஞ்சீவி தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆச்சார்யா படத்தை முடித்ததும் மோகன்ராஜா இயக்கத்தில் லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பார் சிரஞ்சீவி என்று கூறப்பட்டது. ஆனால் அந்த படப்பிடிப்பை துவங்க தாமதமாகியிருக்கிறது. இந்நிலையில் நாட்களை வீணடிக்காமல் வேறு ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சிரஞ்சீவி. பாபி இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் சிரஞ்சீவி.
அந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்குமாறு பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். ரஜினி, நாகார்ஜூனாவை தொடர்ந்து மீண்டும் ஒரு சீனியர் ஹீரோவுடன் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க இளம் நடிகைகள் தயங்குகிறார்கள். சீனியர்களுடன் ஜோடி சேர்ந்தால் இளம் ஹீரோக்கள் ஒதுக்கிவிடுவதால அந்த தயக்கம். ஆனால் சோனாக்ஷி துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளார்.