'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா |
பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார். அந்தாஸ், தேவதாஸ், மொகலே ஆஸம், ஆஸாத் உள்பட 60கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 93 வயதான திலீப் குமாருக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, மும்பை லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர் மனைவி சைரா பானு கூறியிருப்பதாவது: அவருக்கு திடீரென்று நள்ளிரவில் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடடினாக மருத்துவமனையில் அனுமதித்தோம். எனக்கும், அவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் நாங்கள் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். கடந்த சில மாதங்களாக யாரையும் சந்திக்கவில்லை. அதனால் எங்களுக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை.
அதனால் தான் அவரை கொரோனா சிகிச்சை அளிக்காத மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். மூச்சு திணறலுக்கான காரணத்தை கண்டறிய டாக்டர்கள் பலவித சோதனைகளை நடத்தி வருகிறார்கள். தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறது. என்றார்.