ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் ஜெனிபர் என்ற கேரக்டரில் நடித்தவர் பாலிவுட் நடிகை எவலின் சர்மா. இவர் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். தனது நீண்டகால காதலரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் துஷான் பிந்தி என்பவரை காதலித்த வந்தார் எவலின் சர்மா.
கடந்த 2019ல் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை எவலின் சர்மா - துஷான் பிந்தி திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றுள்ளது. இதையடுத்து என்றென்றும் என்ற தலைப்பில் திருமணம் குறித்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் எவலின் சர்மா. அதோடு மிக விரைவில் மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் இவர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.