அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது நடந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் சில தினங்களில் அவரது நினைவு தினம் வர இருக்கிறது. இதையொட்டி ஒரு சிலர் சுஷாந்த் பெயரில் உதவி செய்கிறோம் என கூறிக்கொண்டு அவர் பெயரில் நன்கொடை, நிதி வசூலில் இறங்கியுள்ளனர்.
இந்த செய்திகளை கேள்விப்பட்ட சுஷாந்த் சிங்கின் சகோதரிகளில் ஒருவரான மிட்டு சிங் என்பவர் இதுகுறித்து சற்று காட்டமாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலர், தாங்களாகவே உரிமை எடுத்துக்கொண்டு சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பெயரை பயன்படுத்தி நன்கொடை வசூலிப்பதாக கேள்விப்பட்டேன்.. தங்களது சுயநலத்திற்காக அவர்கள் இவ்வாறு செய்வது மனிதத்தன்மையற்ற செயல்.. நாங்கள் சுஷாந்த் சிங் சார்பாக நன்கொடை வசூலிக்க அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு நபரையும் அறிவிக்கவில்லை. தவிர இப்படி எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த சோக நிகழ்வை முன்னிறுத்தி அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணம் துளியும் இல்லை” என கூறியுள்ளார்.