சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல | என் கேள்விக்கு இன்னும் எம்புரான் தயாரிப்பாளர் பதில் சொல்லவில்லை ; இயக்குனர் மேஜர் ரவி பதிலடி | ஹரிதாவின் ரிதம்! | டி.எஸ்.கே., 'சிக்ஸர்' அடித்த லப்பர் பந்து' |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜய் தேவ்கன் ரூ.60 கோடிக்கு பங்களா வாங்கிய செய்தி தான் பாலிவுட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
மும்பையின் காஸ்ட்லி பகுதியான ஜுஹு-வில் ஒரு பழைய பங்களாவை 60 கோடி ரூபாய் கொடுத்து அஜய் தேவ்கன் வாங்கியுள்ளார். கடந்த வருடக் கடைசியிலேயே அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகத் தெரிகிறது.
மார்க்கெட் மதிப்பின்படி சுமார் 70 கோடி ரூபாய் வரை அந்த பங்களாவின் மதிப்பாம். ஆனால், கொரோனா காலமென்பதால் பத்து கோடி வரை குறைத்து அஜய் வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். தற்போது அந்த பங்களாவில் சில மாற்றங்களைச் செய்யும் பணி நடந்து வருகிறதாம். அது முடிந்ததும் அங்கு அஜய் தேவ்கன் குடியேற உள்ளாராம்.
அந்தப் பகுதியி ல்தான் பாலிவுட் பிரபலங்களான அமிதாப்பச்சன், அக்ஷய்குமார், தர்மேந்திரா, ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் ஏற்கெனவே வசித்து வருகிறார்கள்.
2008ம் ஆண்டிலேயே தனது சொந்தத் தேவைகளுக்காக தனி விமானம் ஒன்றை வாங்கியவர் அஜய். விலை உயர்ந்த சில கார்கள், தனி கேரவன், லண்டனில் சொகுசு பங்களா என அஜய் வாங்கி வைத்திருப்பவற்றைப் பார்த்து பாலிவுட்டில் சிலருக்குப் பொறாமை உண்டு.
அஜய் தேவ்கன் மனைவி கஜோல், மகள் நிசா, மகன் யுக் ஆகியோருடன் வசித்து வருகிறார்.