ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
எந்த மொழி சினிமாவானாலும் கலாச்சார காவலர்கள் என சொல்லிக்கொள்ளும் சிலரால் ஒருசில படங்கள் அவ்வப்போது எதிர்ப்பையும் பட ரிலீசில் சிக்கல்களையும் சந்தித்துத்தான் வருகின்றன. அந்த பட்டியலில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளது அக்சய் குமார் நடிக்கும் பிரித்விராஜ் படம். வரலாற்று வீரனான, மன்னன் பிரித்விராஜ் சவுகான் பற்றி உருவாகும் இந்தப்படத்திற்கு கர்ணிசேனா என்கிற அமைப்பினர் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மாவீரன் பிரித்விராஜின் பெயரில் இந்தப்படம் உருவாவதை தாங்கள் விரும்பவில்லை என்றும், அதனால் படத்தின் டைட்டிலை மாற்றி பிரித்விராஜின் பெயருக்கு இன்னும் மரியாதையை கூட்டுமாறு வேறு ஒரு டைட்டில் வைக்கும்படியும் இந்த கர்ணிசேனா என்கிற அமைப்பினர் கூறியுள்ளனர்.
மேலும் ஏற்கனவே இதுபோல தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி படக்குழுவினர் பெயரை மாற்றுவதற்கு அடம்பிடித்ததால், அந்தப்படம் எடுக்கப்பட்டு வந்த படப்பிடிப்பு அரங்குகள் எப்படி அடித்து நொறுக்கப்பட்டன என்பதையும், அதன்பிறகு அந்த படத்தின் பெயர் பத்மாவத் என மாற்றப்பட்டதையும் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்