2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பாலிவுட் நடிகர், நடிகைகள் அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் தீபிகா படுகோனா கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளாமல் தனது சொந்த ஊரான பெங்களூருவில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ், தாய் உஜ்ஜால, தங்கை அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசிப்பதால் தீபிகாவைவும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து பரிசோதனை செய்து கொண்ட தீபிகாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.