ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

பிரபல இந்தி தொலைக்காட்சி தொடர் நடிகை கானுப்ரியா. அனன்ரோ, கஹி ஏக் காவ்ன், கர்த்தாவ்யா, மேரி கஹானி, டெசு கே போல், தும்ஹாரா இண்டெசர் ஹை உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருக்கிறார். தொகுப்பாளினியாகவும் பணியாற்றினார். ஆன்மீக அமைப்பான பிரம்மா குமாரிகள் அமைப்பில் முக்கிய அங்கம் வகித்து வந்தார். அந்த அமைப்பு நடத்தி வந்த தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கானுப்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் இதற்கான சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவரது மறைவு இந்தி டி.வி. நடிகர், நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கானுப்பிரியா மறைவுக்கு பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.