போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணவத். தற்போது 'தலைவி' தமிழ்ப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் கங்கனா. கடந்த இரண்டு தினங்களாக மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்குப் பின் நடக்கும் கலவரங்கள் குறித்து தன்னுடைய டுவிட்டர் கணக்கில் அடிக்கடி பதிவுகளை இட்டு வந்தார்.
நேற்று மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதன் காரணமாக அவருக்கும் டுவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது.
அவருடைய சில கருத்துக்கள் வன்முறையைத் தூண்டும் விதமாக இருந்ததாகக் கூறி டுவிட்டர் நிறுவனம் அவருடைய கணக்கை தடை செய்துவிட்டது. தொடர்ந்து அவருடைய கணக்கிலிருந்து வன்முறையைத் தூண்டும் விதமாக பதிவிட்டு வந்ததால் அவருடைய டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளோம் என டுவிட்டர் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.