துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் சமூக வலைத்தள பக்கங்களில் துணிச்சலான கருத்துக்களை கூறி வருகிறவர். இந்த கருத்துகளால் அவர் பல சிக்கல்களை சந்தித்தபோது அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து கருத்துக்களை எழுதி வருகிறார். மக்கள் தொகையை கட்டுப்படுத்த இனி 3வது குழந்தை பெற்றவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று அதிரடியான கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: அதிக மக்கள் தொகை காரணமாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். 130 கோடி என்பது நமது அதிகாரபூர்வ மக்கள் தொகை. இதோடு சட்டவிரோதமாக குடியேறிய 25 கோடி மக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் 32 கோடி மக்கள். ஆனால், இந்தியாவை விட 3 மடங்கு நிலமும் வளமும் உள்ளது. சீனாவில் இந்தியாவுக்கு ஈடான மக்கள் தொகை இருக்கலாம். ஆனால், அங்கும் நிலமும் வளமும் மூன்று மடங்கு அதிகம்.
இங்கு மக்கள்தொகை பிரச்சினை மிக மோசமாக இருந்ததால் தான் இந்திரா காந்தி கட்டாயமாக பல லட்சம் மக்களுக்குக் கருத்தடை செய்தார். ஆனால், அவர் கொலை செய்யப்பட்டார். இந்த தேசத்தை எப்படிக் கையாள்வது சொல்லுங்கள்?. மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைக்கக் கடுமையான சட்டங்கள் வேண்டும். இன்றைய நிலையைப் பார்க்கும்போது, மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் குறைந்தபட்சம் சிறை தண்டனையோ, அபராதமோ விதிக்கப்பட வேண்டும். என்று கங்கனா கூறியுள்ளார்.
கங்கனாவின் இந்தக் கருத்தும் வழக்கம் போல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.