துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
கடந்த 2019ல் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியாகி அருண் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது 'தடம்'. மாறுபட்ட இரண்டு வேடங்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அருண் விஜய். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் இந்தியிலும் இதன் ரீமேக் உரிமை விலைபோனது. தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிக்க, இதன் இந்தி ரீமேக்கில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்க ஒப்பந்தமானர்.
அறிமுக இயக்குனரான வர்தன் கெட்கர் இந்தப்படத்தை இயக்க, தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியை இந்தியில் கபீர்சிங் ஆக ரீமேக் செய்த தயாரிப்பாளர்கள் தான் இந்தப் படத்தையும் இந்தியில் தயாரிக்கிறார்கள். இந்தநிலையில் கதையில் செய்யப்பட்ட சில மாற்றங்களில் உடன்பாடு இல்லாததால், இந்தப்படத்தில் இருந்து சித்தார்த் மல்ஹோத்ரா விலகிக்கொள்ள, அவருக்கு பதிலாக தற்போது ஆதித்யா ராய் கபூர் நடிக்க இருக்கிறாராம்.