விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

ஹிந்தித் திரையுலகின் பிரபலமான இரட்டை இசையமைப்பாளர்கள் நதீம் - ஷ்ராவன். இருவரும் இணைந்து இசையமைத்த பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்துள்ளன. இந்த இரட்டையரில் ஒருவரான ஷ்ராவன் ரத்தோட் கொரோனா பாதிப்பால் மும்பையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66. கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உடல்நிலை மோசமடைந்து மரணம் அடைந்தார்.
90களில் நதீஷ்ம் - ஷ்ராவன் இசையமைத்த பல படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. “சாஜன், தில் ஹை கி மன்தா நகின், தீவானா, தட்கன், பர்தேஸ், ஆஷிகி, கசூர், ராஸ், ஹம் ஹைன் ரஹி பியார் கே, தில்வாலே, ராஜா, ராஜா ஹிந்துஸ்தானி,” ஆகிய படங்கள் அவர்கள் இசையமைத்த முக்கிய படங்கள்.
ஷ்ராவன் மறைவுக்கு ஹிந்தி சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், “நமது இசையுலகத்திற்கும், ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாகும். ஆழ்ந்த இரங்கல். மரியாதையும், பிரார்த்தனைகளும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இணைந்து இசையமைத்து வந்த நதீம் - ஷ்ராவன் ஆகியோர் ஆறு வருடங்களுக்கு முன்பு பிரிந்து தனித்தனியாக இசையமைக்க ஆரம்பித்தனர்.