இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் | அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் | விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை |
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கும் படம் 'ராதே'. இப்படத்தை ஒரே சமயத்தில் தியேட்டர்களிலும், டிஜிட்டல் தளங்களிலும் மே 13ம் தேதியன்று வெளியிடுகிறார்கள். படத்தின் டிரைலர் இன்று யு டியுப் தளத்தில் வெளியிடப்பட்டது.
தமிழில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'க.பெ.ரணசிங்கம்' படத்தை டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியிட்ட போது அதற்காக 199 ரூபாயை கட்டணமாக வசூலித்தார்கள். அதே சமயத்தில் வெளியான 'காலி பீலி' என்ற ஹிந்திப் படத்திற்கு 299 ரூபாயை கட்டணமாக வசூலித்தார்கள்.
தற்போது 'ராதே' படத்திற்கும் அதே 299 ரூபாயை ஒரு முறை பார்ப்பதற்கான கட்டணமாக வசூலிக்க உள்ளார்கள்.
கொரோனா காரணமாக மகாராஷ்டிராவில் ஊரடங்கு விதிக்கப்பட்டு தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்களை மீண்டும் எப்போது திறப்பார்கள் என்று தெரியாத நிலையில் தான் 'ராதே' படத்தை ஒரே சமயத்தில் தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும் வெளியிடுவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியான பெரிய படமான அக்ஷய்குமார் நடித்த 'லட்சுமி' படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது பாலிவுட்டின் வசூல் நாயகனாக சல்மான்கான் நடித்துள்ள 'ராதே' படம் எப்படியான வரவேற்பைப் பெறும் என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.