வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு |

கடந்த மூன்று வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் இளம் நடிகர் வருண் தேஜ் இருவரும் இணைந்து நடித்திருந்த படம் எப்-2.. கதாநாயகிகளாக தமன்னா, மெஹ்ரீன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலையும் அள்ளியது. இதன் அடுத்த பாகமாக தற்போது எப்-3யும் தயாராகி வருகிறது.
இந்தநிலையில் எப்-2 படம் தற்போது ஹிந்தியில் ரீமேக்காகிறது. இந்தப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ள, நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.. வருண் தேஜ் கதாபாத்திரத்தில் அர்ஜுன் கபூர் நடிக்க இருக்கிறார்.. அனீஸ் பாஸ்மி என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவல் முடிவாகவில்லை என சொல்லப்படுகிறது.




