இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஹாலிவுட்டில் தான் வயதிற்கும், கவர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி வயதான காலத்திலும் பல ஹாலிவுட் நடிகைகள் விதவிதமான கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவார்கள்.
அந்த பேஷன் தற்போது பாலிவுட்டிலும் தொற்றிக் கொண்டுவிட்டது போலும். 47 வயதான பாலிவுட் நடிகையான மலாய்க்கா அரோரா ஒரு ஏடாகூடமான பீச் பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
பீச் என்றாலோ மலாய்க்காவுக்குக் கொள்ளைப் பிரியமாம். இதற்கு முன்பும் இப்படி விதவிதமான போஸ்களுடன் புகைப்படங்களை வெளியிட்டவர் இந்த முறை அதற்கான கேப்ஷனையும் ஒளிவு மறைவு இல்லாமல் பதிவிட்டதுதான் பலரின் அதிர்ச்சிக்குக் காரணம்.
பீச் பம் என்ற வார்த்தைகளுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் அவரது பாலோயர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
தன்னைவிட 12 வயது இளையவரான அர்ஜுன் கபூரைக் காதலித்து வருகிறார் மலாய்க்கா. அர்ஜுன் கபூர் வேறு யாருமல்ல வலிமை படத்தைத் தயாரிக்கும் போனிகபூருக்கும் அவரது முதல் மனைவி மோனா கபூருக்கும் பிறந்த மகன்.
மேலே செய்தியில் இருப்பது அந்த போட்டோ கிடையாது. அவர் பதிவிட்ட போட்டோவை காண அவரின் இந்த இன்ஸ்டாபதிவு லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.... https://www.instagram.com/p/CMT9QhMBrpj/