ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ், தந்தையின் பாதையில் நடிப்பு பக்கம் திரும்பிவிட, அவரது மகள் விஸ்மாயாவோ சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார்.. ஆனால் தற்போது அவருக்குள் ஒளிந்து கொண்டுள்ள ஒரு எழுத்தாளரை, தான் எழுதி வெளியிட்டுள்ள, 'கிரையன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட்' என்கிற புத்தகம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த பிப்-14ல் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்த புத்தகத்தை வெளியிட்ட விஸ்மாயா, தன்னுடைய தந்தையின் மிக நெருங்கிய நண்பர்களுக்கும் தனது நட்பு வட்டாரத்திற்கும் இந்த புத்தகத்தின் பிரதிகளை அனுப்பி வைத்தார். அதில் நடிகர் அமிதாப் பச்சனும் ஒருவர். இந்தப்புத்தகத்தை படித்துவிட்டு விஸ்மாயாவின் இலக்கிய திறமையை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அமிதாப்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் ரொம்பவே வியக்கும் நடிகர் மோகன்லால், தனது மகள் விஸ்மாயா எழுதிய புத்தகம் ஒன்றை அனுப்பியுள்ளார். ரொம்பவே நுட்பமான, உணர்வுப்பூர்வமான பாடல்கள் மற்றும் ஓவியங்களின் பயணமாக இருக்கிறது இந்த படைப்பு... திறமை என்பது பரம்பரரை குணம்” என பாராட்டியுள்ளார். இவர் தவிர, நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்டோரும் விஸ்மாயாவின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.