எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் |

பிரபல பாலிவுட் நடிகர் ராஜீவ்(58) கபூர் மாரடைப்பால் காலமானார். திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் கபூர் குடும்பம் மிகவும் பிரபலமானது. மறைந்த நடிகர் ராஜ்கபூரின் மகன்களில் ஒருவரான ராஜீவ் கபூர், 1983ம் ஆண்டு ஏக் ஜான் ஹைன் ஹம் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ராஜீவ். தொடர்ந்து ராம் தேரி கங்கா மைலி, ஆஸ்மான், லவ்வர் பாய், ஜபர்தஸ்த், ஹம் தோ சலே பர்தேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பிறகு இயக்கம், தயாரிப்பு என சினிமாவில் பயணித்தார். மும்பையில் வசித்து வந்த இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் இன்று(பிப்., 9) அவரது உயிர் பிரிந்தது.

ராஜீவ் கபூரின் தந்தை பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்த ராஜ் கபூரின் மகன் ஆவார். இவரது சகோதர்களில் ஒருவரான ரிஷி கபூரும் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். கடந்தாண்டு கொரோனா காலக்கட்டத்தில் ஏப்ரல் மாதம் மறைந்தார். மற்றொரு சகோதரரான ரன்தீர் கபூரும் பிரபல நடிகராக திகழ்ந்தவர். இப்போது வயது மூப்பால் சினிமாவை விட்டு விலகி உள்ளார்.
ராஜீவ் கபூரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரன்தீர் கபூர் கூறுகையில், என் தம்பி ராஜீவ் இறந்துவிட்டார். மருத்துவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவரின் உடலை வாங்கிச் செல்ல காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு டுவிட்டரில், மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அதற்குள் எங்களை விட்டு எப்படி போனீர்கள் சிம்ப். நீங்கள் சொல்லி கொடுத்தது, உங்களிடம் நான் கற்றது தான் நான் தைரியமாக நடக்க உதவுகிறது. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.