சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தென்னிந்திய மற்றும் இந்தி படங்களில் ஒரு பாடலுக்கு ஆடுகிறவர் நடிகை கெஹனா வசித். சில படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தும் இருக்கிறார். தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததோடு ஒரு பாடலுக்கு ஆடியும் இருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் யூ டியூப் சேனல் ஒன்று தொடங்கினார் கெஹனா. இந்த சேனலுக்கு மாதம் 2 ஆயிரம் கட்டணம் வசூலித்தார். காரணம் அந்த சேனலில் அவர் நடித்துள்ள ஆபாச படங்கள் மட்டுமல்லாது வாரத்திற்கு 3 ஆபாச படங்களை தயாரித்தும், அதையும் பதிவேற்றம் செய்தும் வந்துள்ளார். அரை நிர்வாண படங்களுக்கு ஒரு கட்டணம், முழு நிர்வாண படங்களுக்கு தனி கட்டணம் என்று வசூலித்துள்ளார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மும்பை மலாட் மல்வாணி பகுதியில் கெஹனா குடியிருந்த பங்களாவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் ஆபாச படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகைகள், கேமரா மேன், இயக்குனர் கைது செய்யப்பட்டனர். கெஹனாவையும் போலீசார் கைது செய்தனர். இதுவரை அவர் 87 ஆபாச படங்கள் எடுத்து அதனை பதிவேற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.