ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் |
நடிகை சன்னி லியோன் டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்புக்காக கேரளாவுக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். இந்நிலையில் கேரள மாநிலம் பெரும்பாவூரைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஸ்ரீயாஸ் என்பவர், கேரள டிஜிபியிடம் நடிகை சன்னி லியோன் மீது பண மோசடி புகார் அளித்தார்.
அதில், சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நடிகை சன்னி லியோனை ஒப்பந்தம் செய்தேன். அதற்காக அவருக்கு.29 லட்சம் கொடுத்தேன். பணத்தைப் பெற்றுக்கொண்ட சன்னி லியோன், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கேரள குற்றப்பிரிவு போலீசார், திருவனந்தபுரத்தில் தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் சன்னி லியோனிடம் விசாரணை நடத்தினர். சன்னி மீது வழக்கு பதிவு செய்யப்படலாம். அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு சன்னி லியோன் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், பலமுறை நிகழ்ச்சியை ஒத்தி வைத்தனர். பிறகு பஹ்ரைனில் நடப்பதாகக் கூறினார்கள். ஆனால், நடக்கவில்லை. 2019 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தேன். ஒப்பந்தத்தின் படி எனக்குச் சம்பளம் தர மறுத்துவிட்டனர். அதனால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
என் தரப்பில் நான் சரியாக இருந்தேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியாக நடந்து கொள்ளவில்லை. இதனால் இந்த புகார் போலியானது முறையற்றது. இந்த வழக்கில் என்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும். என்று தனது மனுவில் சன்னி லியோன் கூறியிருக்கிறார்.