ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கொடூர வில்லனாக நடித்துவந்த பாலிவுட் நடிகர் சோனு சூட், கொரோனா தாக்கத்திற்கு பின், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட பலருக்கும், தான் செய்த உதவிகளால் மக்கள் மத்தியில் நிஜ ஹீரோவாகவே மாறிவிட்டார். அவருக்கென உருவாகி விட்ட புதிய இமேஜ் காரணமாக அவரை வில்லனாக நடிக்க வைக்க இயக்குனர்கள் தயங்குகிறார்கள்.. அவரும் இனி வில்லனாக நடிப்பதில்லை என முடிவெடுத்து விட்டார். இன்னும் ஒருவர் ஒருபடி மேலேபோய் சோனு சூட்டை வைத்து பாகல் நஹி ஹோனா என்கிற இசை ஆல்பத்தையே உருவாக்கி விட்டார்.
எல்லைக்கு செல்லும் ராணுவ வீரனுக்கும் அவனது காதலிக்குமான காதல் மற்றும் பிரிவு உணர்வுகளை மையப்படுத்தி இந்த இசை ஆல்பம் உருவாகி உள்ளது. இதில் முழுக்க முழுக்க ரொமான்ஸ் நாயகனாக மாறியுள்ளார் சோனு சூட். இந்த இசை ஆல்பத்தில் பாடியுள்ள சுனந்தா சர்மாவே இதில் சோனு சூட்டின் காதலியாகவும் நடித்துள்ளார். அவ்வி ஸ்ரா என்பவர் இசையமைத்துள்ள இந்த ஆல்பம் ராணுவ வீரர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியாகி இதுவரை 12 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.