சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இந்தியில் உருவாகவிருக்கும் காஞ்சனா படத்தில் திருநங்கை வேடத்தில் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளார். டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா பேய் படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. இதில் லட்சுமிராய், கோவை சரளா ஆகியோரும் நடித்திருந்தனர். சரத்குமார் திருநங்கை வேடத்தில் வந்தார். இப்படத்தை ரூ.9 கோடி செலவில் எடுத்தனர். ரூ.30 கோடி வசூல் ஈட்டியது. காஞ்சனா படம் இப்போது இந்தியிலும் ரீமேக் ஆகிறது. திருநங்கையாக நடிக்க சஞ்சய் தத் விருப்பம் தெரிவித்துள்ளார். இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.
இதுகுறித்து லாரன்ஸ் கூறுகையில், காஞ்சனா இந்தி ரீமேக்கில் நடிக்க சஞ்சய் தத் ஆர்வமாக உள்ளார். சில பெரிய பட நிறுவனங்கள் என்னை அணுகி காஞ்சனா படத்தின் இந்தி உரிமையை கேட்டு வருகின்றன. அவர்கள் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர், நடிகையர் பட்டியலையும் அளித்துள்ளனர். அவர்களிடம் விரைவில் பேச உள்ளேன், என்றார்.