சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ஐட்டம்தான், என்று நடிகை அசின் கூறியுள்ளார். கஜினி படம் மூலம் இந்திக்கு போன அசின் இப்போது, அக்ஷய் குமாருடன் கில்லாடி 786 படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க பாலிவுட்டில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியொன்றில், ஐட்டம் கேர்ள் ஆக நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமா குறித்து அவர் கூறுகையில், எனக்கு தமிழ் சினிமா மீது எந்த கோபமும் இல்லை. ஆனால் நான் இந்த அளவு பெரிய நடிகை ஆன பிறகும், என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் ரொம்ப சில்லியான ஸ்கிரிப்டுகளோடுதான் வருகிறார்கள். அல்லது நான் ஏற்கெனவே நடித்த பாத்திரங்களை ரிபீட் செய்வது போல கதைகளோடு வருகிறார்கள். அதனால்தான் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை, என்று கூறியிருக்கிறார்.
பெரிய படங்களில் ஐட்டம் நம்பர் வந்தால் ஒப்புக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அசின், எனக்கு பிடிக்காத வார்த்தை ஐட்டம்தான். இந்தி என்றல்ல, எந்த மொழியிலும் ஐட்டமாக நடிக்க எனக்கு பிடிக்காது, என்று கூறியுள்ளார்.