சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அமிதாப்பச்சன், அமீர்கான் நடித்த தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படம் சமீபத்தில் வெளிவந்தது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப்படம் பெரும் தோல்வியை தழுவியது. அமீர்கான் நடித்த டங்கல் படம் சீனாவில் பரபரப்பாக ஓடி 500 கோடிக்கு மேல் வசூலித்தது. சீனாவில் அமீர்கானுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. அதனால் தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படம் சீனாவில் வெளியிடப்படுகிறது. படத்தை பார்க்கும் ஆர்வத்தில் சீன மக்கள் இருக்கிறார்கள்.
இந்த படத்தின் புரமோசனுக்காக அமீர்கான், சீனா சென்று உள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக சீனாவின் முக்கிய நகரமான குவாங்சோவில் உள்ள குவாங்டாங் பல்கலைகழத்தில் அமீர்கான் உரையாற்ற, அங்குள்ள மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு பல்கலைக்கழகமும் அனுமதித்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பல்கலைக்கழகம் அனுமதியை ரத்து செய்து, அமீர்கான் பல்கலைக்கழகத்திற்குள் வர தடை விதித்தது.
"இந்தியாவின் மிகப்பெரிய கலைஞர் அமீர்கான் எங்கள் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றகிறார் என்று தான் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு அனுமதி அளித்தோம். ஆனால் அமீர்கான் சீனா வந்திருப்பது தனது பட புரமோசனுக்காக, எனவே இது சினிமா புரமோசன் நிகழ்ச்சியாகிறது. ஆகையால் அனுமதி இல்லை" என்று பல்கலைக்கழகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் தங்கள் நிகழ்ச்சியை அருகில் உள்ள ஓட்டலுக்கு மாற்றினர். அங்கு நிகழ்ச்சி நடந்தது.