சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் விடலைப் பெண்ணாக நடித்தவர் பிரீடா பின்டோ. இந்தியாவில் தயாரானாலும் அது ஹாலிவுட் படம் என்பதால் பிரீடாவுக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது. தொடர்ந்து நடித்தார். தற்போது ஆங்கில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.
பிரீடா ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடிக்கும்போது ரோஹன் அன்டோ என்பவரை காதலித்தார். இந்த காதல் கைகூடவில்லை. அதன்பின்னர் ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் உடன் நடித்த தேவ் படேலை காதலித்தார். பல ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த காதலும் கசந்து அவரையும் பிரிந்தார்.
நீண்டநாள் காதல் வலையில் சிக்காமல் இருந்த பிரீடா தற்போது ஹாலிவுட் படங்களின் புகைப்பட கலைஞரும், சாகச புகைப்பட கலைஞருமான கோரி டிரான் என்பவரை தீவிரமாக காதலித்து வருகிறார். எங்கு சென்றாலும் இவர்கள் இருவரும் இணைந்தே செல்கிறார்கள். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின.
இந்நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பிரீடா, இவரையாவது திருமணம் செய்வாரா.? அல்லது இதுவும் கடந்து போகுமா.? அவருக்கே வெளிச்சம்.