இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா |

விளம்பர படங்களில் நடிக்கும், ரோஹ்மன் ஷாலை 27, அடுத்தாண்டு திருமணம் செய்யப் போவதாக வெளியான செய்திகளை, முன்னாள் பிரபஞ்ச அழகியும், பாலிவுட் நடிகையுமான, சுஷ்மிதா சென், 42, மறுத்துள்ளார்.
சுஷ்மிதா சென், ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில், ரட்சகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதுவரை, 10க்கும் மேற்பட்டோரை காதலித்துள்ளார். யாரையும் திருமணம் செய்ததில்லை. 2000ல், ஒரு பெண் குழந்தையையும், 2010ல், மற்றொரு பெண் குழந்தையையும், தத்தெடுத்து, சுஷ்மிதா சென் வளர்த்து வருகிறார். இரு மாதங்களுக்கு முன், விளம்பர படங்களில் நடிக்கும், ரோஹ்மன் ஷாலை சந்தித்த சுஷ்மிதா, அதன் பின், அவருடன் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தார். அதனால், இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக பேசப்பட்டது. 
இந்நிலையில், ரோஹ்மன் ஷால் - சுஷ்மிதா, அடுத்தாண்டு திருமணம் செய்யப் போவதாக, சமீபத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகின. இருவரது வயது வித்தியாசத்தை குறிப்பிட்டு, பல பத்திரிகைகள், ஆச்சரியத்துடன் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில், இந்த செய்தியை, சுஷ்மிதா மறுத்துள்ளார். 
தனக்கும், ரோஹ்மனுக்கும் திருமணம் நடக்காது எனக் கூறியுள்ள அவர், ரோஹ்மனை காதலித்து வருவதாகவும், அவருடன், டேட்டிங் சென்று வருவதாகவும், ஒளிவுமறைவின்றி தெரிவித்துள்ளார்.சமூக வலைதளத்தில், இதுதொடர்பாக, சுஷ்மிதா வெளியிட்டுள்ள பதிவை, ஏராளமானோர் பாராட்டி உள்ளனர். ஒளிவுமறைவின்றி, உண்மையை கூறிய அவரது நேர்மை பிடித்திருப்பதாக, பலர் தெரிவித்துள்ளனர்.
 
           
             
           
             
           
             
           
            