ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முதன்முறையாக அமீர்கான், அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கும் படம், தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான். விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கும் இப்படம், கன்பெசன்ஸ் ஆப் ஏ தக் எனும் நாவலை மையமாக வைத்து, வரலாற்று பின்னணியில் உருவாகி உள்ளது.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட தக்கீஸ் எனும் கொள்ளையர்களை பற்றிய கதை இது. அமிதாப், தக்ஸ் இன தலைவராக ஆசாத் எனும் கேரக்டரில் மிரட்டலாக நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக அமீர்கானும் பிராங்கி எனும் ரோலில் ஈர்த்துள்ளார்.
இதன் டிரைலர், ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகி உள்ளது. டிரைலர் வெளியான 5 மணிநேரத்தில் ஹிந்தியில் 43 லட்சம் பேரும், தமிழில் 62 ஆயிரம் பேரும், தெலுங்கில் 72 ஆயிரம் பேரும் பார்த்துள்ளனர்.
ரூ.210 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படம், தீபாவளியை முன்னிட்டு நவ., 8-ம் தேதி ரிலீஸாகிறது.