'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
திருமணம் முடிந்த பின், சோனம் கபூரிடம் ரொம்பவே மாற்றம் தென்படுகிறது. சினிமாவில் நடிப்பதை விட, பேஷன் ஷோக்களில் பங்கேற்பதில் தான், ஆர்வம் காட்டுகிறார். புத்தம் புது உடைகளை அறிமுகப்படுத்துவதில், பாலிவுட்டில், மற்ற நடிகையருக்கு முன் மாதிரியாக திகழ்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டால், 'குழந்தை பருவத்திலிருந்தே, வித்தியாசமான உடைகளை அணிவதில் ஆர்வம் காட்டுவேன்.
இதற்கு காரணம், என் அப்பா, அனில் கபூர். அவர், ஹீரோவாக நடித்த படங்களில், அவர் அணிந்து வரும் உடைகள், மற்ற நடிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அவரைப் பார்த்து தான், எனக்கும், இந்த துறையில் ஆர்வம் வந்தது' என்கிறார்.
சினிமாவுக்கு முழுக்கு போடப் போவதாக வெளியான தகவலை, திட்டவட்டமாக மறுக்கிறார், சோனம் கபூர். 'தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அதற்கு தான், முன்னுரிமை கொடுப்பேன். நேரம் கிடைக்கும் போது மட்டுமே, பேஷன் ஷோக்களில் பங்கேற்கிறேன்' என்கிறார், சோனம் கபூர்.